வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன.. ட்ரம்ப் அப்படி சொல்கிறார்.. பென்டகன் இப்படி சொல்கிறது.. ஈரான் தளபதி கொலையில் திடீர் சர்ச்சை

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க படைகள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்

    வாஷிங்டன்: நான்கு அமெரிக்க தூதரகங்களை தாக்க ஈரான் திட்டமிட்டிருந்தது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய நிலையில், அப்படி ஒரு உளவுத்துறை அறிக்கை வரவில்லை என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் தலைமை பொறுப்பில் இருப்பவர் இவர்.

    ஈரான் ராணுவ தளபதியை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொல்ல, ட்ரம்ப் இதை ஒரு காரணமாக கூறிய நிலையில், அதை பென்டகன் மறுத்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    ஈரான் ராணுவ தளபதி சுலைமானி, அமெரிக்காவால் சமீபத்தில் கொல்லப்பட்டார். இதை நியாயப்படுத்த, ட்ரம்ப் கூறிய வார்த்தைகள்தான், மேற்சொன்னவை. ஆனால், எஸ்பர் நேற்று அளித்த பேட்டியில், 4 தூதரகங்களை தாக்க ஈரான் திட்டமிட்டது பற்றிய உளவுத்துறை தகவல் பென்டகனுக்கு வரவில்லை என்றார்.

    சத்ரபதி சிவாஜியுடன் பிரதமர் மோடியை ஒப்பிடும் பாஜக தலைவரின் புத்தகம்- வெடித்தது சர்ச்சைசத்ரபதி சிவாஜியுடன் பிரதமர் மோடியை ஒப்பிடும் பாஜக தலைவரின் புத்தகம்- வெடித்தது சர்ச்சை

    பொதுக் கருத்து

    பொதுக் கருத்து

    அதேநேரம், தங்கள் அதிபரை விட்டுக்கொடுக்க விரும்பாத எஸ்பர், தூதரகங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த கூடும் என்பது ஒரு பொதுக்கருத்தாக இருந்திருக்கும். நானும் கூட அந்த கருத்தை பகிர்ந்துள்ளேன். ஆனால் குறிப்பிட்டு உளவு அறிக்கை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    ஈரான் தளபதி

    ஈரான் தளபதி

    ஈரான் தளபதி சுலைமானி, ஜனவரி 3ம் தேதி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை, பத்திரிக்கையாளர்களை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள தூதரகம் உட்பட, பல்வேறு நாடுகளில் உள்ள 4 அமெரிக்க தூதரகங்களை தகர்க்க ஈரான் திட்டமிட்டிருந்தது என குற்றம்சாட்டினார்.

    பாதுகாப்பு ஆலோசகர்

    பாதுகாப்பு ஆலோசகர்

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ'பிரையன், எஸ்பரின் கருத்தை எதிரொலித்தார். ஒரு உடனடி அச்சுறுத்தலுக்கு, வாய்ப்பு இருப்பதாக, உளவுத்துறை தகவல் இருந்தது. ஆனால் நான்கு தூதரகங்கள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை. நாடாளுமன்ற புலனாய்வுக் குழுவின் தலைவரான கலிபோர்னியா ஜனநாயகக் கட்சியினரும், 'எட்டு கேங்' உறுப்பினருமான ஆடம் ஷிஃப் நேற்று அளித்த பேட்டியிலும், நான்கு தூதரகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து எங்கள் குழுவுக்கு அறிவிக்கப்படவில்லை என்று கூறினார். எட்டு கேங் எனப்படுவது, அமெரிக்க காங்கிரசுக்கே தெரிவிக்காத ரகசிய தகவல்களையும் தெரிவிக்கப்பட வேண்டிய உயர்மட்ட அமைப்பாகும். பாதுகாப்பு ரகசியங்கள், இந்த குழுவிற்கு தெரியாமல் இருக்காது.

    சந்தேகம்

    சந்தேகம்

    குடியரசுக் கட்சியின் செனட்டர் மைக் லீ நேற்று, அளித்த பேட்டியில், ஈரான் குறித்து அதிபர் மற்றும் பாதுகாப்பு செய்தி அறிவிப்பாளர்கள், காங்கிரசுக்கு வழங்கிய தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கவலை ஏற்படுகிறது. எங்களுக்கு ஓரளவு பொதுவான அறிக்கைகள் வழங்கப்பட்டன. உடனடி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனக்கு அதில் சந்தேகம் இல்லை. ஆனால், அது சொல்லப்பட்டாலும் அதற்கான ஆதாரங்களை இதுவரை பெறாதது எனக்கு எரிச்சலூட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    No specific evidence Iran was plotting to attack 4 U.S. embassies, says Pentagon chief.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X