வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவின் சி.ஐ.ஏ. கஸ்டடியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உறவினர் கிம் ஹான் சோல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் கஸ்டடியில் வடகொரியா அதிபர் கிம் ஜாங்கின் குடும்பத்தைச் சேர்ந்த கிம் ஹான் சோல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடகொரியாவை உருவாக்கியவர் கிம் இல் சிங். இவரது பேரன்களில் ஒருவரான கிம் ஜாங் நம்மின் மகன் கிம் ஹான் சோல். சீனாவின் மக்காவு மாகாணத்தில் வசித்து வந்தது கிம் ஜாங் நம் குடும்பம்.

இந்த நிலையில் 2017-ம் ஆண்டு கோலாலம்பூரில் கிம் ஜாங் நம் படுகொலை செய்யப்பட்டார். வடகொரியா அரசின் உளவாளிகள் மூலம் அவர் நம் படுகொலை செய்யப்பட்டார். அப்போதில் இருந்து கிம் ஜாங் நம்மின் மகன் கிம் ஹான் சோல் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

North Koreas Kim Han-sol Taken by US CIA

வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம்ஜாங்கின் சகோதரர்களில் ஒருவர்தான் கிம் ஹான் சோல். இந்த நிலையில்தான் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வின் பிடியில் கிம் ஹான் சோல் இருப்பதாக ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

தந்தை கிம் ஜாங் நம் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வடகொரியா அதிபருக்கு எதிரான கிளர்ச்சி குழுவின் உதவியை நாடி இருக்கிறார் சோல். சீனாவின் மக்காவு மாகாணத்தில் இருந்து தைவான் வழியாக நெதர்லாந்துக்கு தப்பிச் செல்ல சோல் முயன்றார்.

எஸ்.ஏ சந்திரசேகர் கட்சி அவ்ளோதானா... தலைவர் ராஜாவின் திடீர் ராஜினாமாவின் பின்னணிஎஸ்.ஏ சந்திரசேகர் கட்சி அவ்ளோதானா... தலைவர் ராஜாவின் திடீர் ராஜினாமாவின் பின்னணி

ஆனால் நெதர்லாந்துக்கு சோல் சென்றடையவில்லை. இதனால் சோல் என்னவானார் என்பது தெரியாமல் போனது. தற்போதுதான் சி.ஐ.ஏ. கஸ்டடியில் சோல் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

English summary
According to the Media Reports North Korea's Kim Han-sol Taken by US CIA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X