வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீன சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதா?.. அமெரிக்கா விசாரிக்கிறது: ட்ரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சீனா மறைத்து வருகிறது. அமெரிக்காவைவிடவும், கொரோனா வைரஸால், சீனாவின் உண்மையான இறப்பு எண்ணிக்கை "மிக அதிகமாக உள்ளது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

Recommended Video

    சீன சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதா?.. விசாரணையை தொடங்கும் அமெரிக்கா

    கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையை ஒரே நாள் இரவில் 50% உயர்த்தி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதாவது வுஹானில் மட்டும் இந்த எண்ணிக்கை மாற்றம் செய்துள்ளது. வுஹனில் 1290 பேர் கூடுதலாக பலியானதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இதனால் வுஹானில் மட்டும் 3869 பேர் பலியானதாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக சீனாவில் 4,632 பேர் பலியாகி உள்ளனர்.

    அதிர்ச்சி.. இந்திய கடற்படை வீரர்களுக்கு பரவிய கொரோனா.. மும்பையில் 21 பேர் மருத்துவமனையில் அனுமதி அதிர்ச்சி.. இந்திய கடற்படை வீரர்களுக்கு பரவிய கொரோனா.. மும்பையில் 21 பேர் மருத்துவமனையில் அனுமதி

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்தது. சீனா உண்மையான பலி எண்ணிக்கையை சொல்லவில்லை. அங்கு இன்னும் பலர் பலியாகி இருக்கலாம். ஆனால் சீனா உலக நாடுகளின் மத்தியில் தங்கள் மதிப்பை உயர்த்த வேண்டும் என்று பலி எண்ணிக்கையை குறைத்து காட்டியுள்ளது. கொரோனா குறித்த உண்மையை மறைத்தது போல தற்போது கொரோனா பலி எண்ணிக்கையையும் சீனா மறைக்கிறது என்று புகார் வந்தது.

    ட்ரம்ப் அதிரடி

    ட்ரம்ப் அதிரடி

    எந்த தலைவரும், வெளிப்படையாக இதை கூறாத நிலையில், ட்ரம்ப் வெளியிட்ட ஒரு ட்வீட்டில், "கண்ணுக்குத் தெரியாத எதிரியிடமிருந்து இறப்பவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஆனால், அவர்கள் கூறியதைவிட மிக அதிகமாக இருக்கலாம். அமெரிக்காவைவிடவும் மிக அதிகம், நெருங்கவில்லை!" இவ்வாறு, டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

    50 சதவீதம்

    50 சதவீதம்

    வுஹான் பகுதியில், நடந்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையை திடீரென 50 சதவிகிதம் அதிகரித்து சீனா நேற்று அறிவித்திருந்தது. இதைத்தான், ட்ரம்ப் இவ்வாறு சந்தேகத்தோடு குறிப்பிட்டுள்ளார். சீன வெளிப்படைத்தன்மை குறித்து பல நாடுகளுக்கும் ஐயம் உள்ளது. அமெரிக்க அதிபர் அதை நேரடியாக போட்டு உடைத்துள்ளார்.

    சீனா விளக்கம்

    சீனா விளக்கம்

    வுஹான் நகரத்தில் புதிதாக 1,290 இறப்புகளை சீனா சேர்த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சீன நிர்வாகம் வேறு மாதிரி கூறுகிறது. அந்த மாகாணத்தில் பலரும் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்றதாகவும், அந்த மரணங்கள் தொடர்பான புள்ளி விவரம் தற்போது எடுக்கப்பட்டு அது வெளியிடப்பட்டதாக கூறுகிறது.

    வைரஸ் பரவல்

    வைரஸ் பரவல்

    வாஷிங்டன் போஸ்டில் ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், அமெரிக்க தூதரக அதிகாரிகள் 2018ம் ஆண்டு ஜனவரியில் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜிக்கு சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியாக இல்லை என்பதை கவனித்துள்ளனர். இதையடுத்து, "WIV ஆய்வகத்தில் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பலவீனங்கள்" பற்றிய ஒரு எச்சரிக்கையை தூதரக அதிகாரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பியதாகவும்அதிக கவனம் மற்றும் உதவி தேவை என அதில் முன்மொழிந்ததாகவும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

     ஆய்வகத்தில் லீக்

    ஆய்வகத்தில் லீக்

    "வவ்வால் கொரோனா வைரஸ்கள் பற்றிய ஆய்வகத்தின் பணிகள் மற்றும் அவற்றின் சாத்தியமான மனித பரவுதல் காரணமாக புதிய SARS போன்ற தொற்றுநோய் அபாயம் ஏற்படக் கூடும் என்று" அந்த கேபிள் எச்சரித்தது. இந்த செய்தி வெளியான நிலையில்தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இருவரும் சீன அரசு, வூஹான் பரிசோதனை மையத்திலிருந்து, வைரசை லீக்காகியிருக்கலாம் என்பது குறித்து, விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    English summary
    US President Donald Trump has accused China over COVID-19 deaths. The US President took to his twitter handle to make these claims.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X