வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பண்பின் சிகரம் ஓபிஎஸ்.. வீரத் தமிழன் பன்னீர் செல்வம்.. ஓபிஎஸ் டே.. அடடே.. அமெரிக்காவே அதிருதுல்ல

Google Oneindia Tamil News

Recommended Video

    பண்பின் சிகரம் ஓபிஎஸ்.. அமெரிக்காவில் வழங்கப்பட்ட விருதுகள்

    வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள, தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பண்பின் சிகரம், வீரத்தமிழன் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் நடந்த விழாவில், நவம்பர் 14ம் தேதியை, 'ஓபிஎஸ் டே' என்று அறிவித்து கவுரவப்படுத்தினர்.

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 10 நாள் அரசுமுறைப் பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

    அங்கே அவர் அணியக் கூடிய கோட் சூட்கள் எல்லாம் கலக்கலாக சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. தேனி மாவட்ட பச்சைத் தமிழர் என்றபோதிலும், ஓபிஎஸ்சுக்கு கோட்-சூட் கச்சிதமாக பொருந்திப்போகிறது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு.. 10,000 போலீஸ் குவிப்பு.. பம்பைக்கு கார்களில் போக முடியாதுசபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு.. 10,000 போலீஸ் குவிப்பு.. பம்பைக்கு கார்களில் போக முடியாது

    மகாத்மா காந்தி

    மகாத்மா காந்தி

    இந்த நிலையில், அமெரிக்காவில், ஓ.பன்னீர்செல்வம் பல விருதுகளை வாங்கி குவித்து வருவது அவரது ஆதரவாளர்களுக்கு பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படித்தான், கடந்த 12ம் தேதி, அமெரிக்காவின் நெபர்வல்லியில் உள்ள, மூத்த குடிமகன்களுக்கான, மெட்ரோபாலிட்டன் ஏஷியா பேமிலி சர்வீசஸ் மையம் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது அவருக்கு, 'மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸலன்ஸ்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    தொழில் முதலீடு

    தொழில் முதலீடு

    வெறும் விருதுகள் மட்டுமல்ல, தொழில் துறை முதலீடுகள் பற்றியும் ஓபிஎஸ் ஆலோசனைகளை நடத்தியுள்ளார். வாஷிங்டனிலுள்ள வாட்டர் கேட் ஹோட்டலில் அமெரிக்க- இந்திய சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் கவுன்சில் நிர்வாகிகளை பன்னீர் செல்வம் சந்தித்தார். அவர்களிடம் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    ஓபிஎஸ் டே

    ஓபிஎஸ் டே

    ஹூஸ்டனிலுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் ஓபிஎஸ். அங்கு ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி திருக்கோவில் தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் கல்வெட்டைத் திறந்து வைத்தார். ஸ்ரீ மீனாட்சி கோவில் சொசைட்டி, ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட விழாவில், டெக்சாஸின் ஃபேர்லாண்ட் மேயர் டாம்ரிட், தினத்தை அதாவது, நவம்பர் 14ம் தேதியை ஓபிஎஸ் டே என்று அறிவித்து கவுரவப்படுத்தினார்.

    பண்பின் சிகரம், வீரத்தமிழன்

    இதுமட்டுமில்லை.. ஸ்ரீபத்மினி ரங்கநாதன் ட்ரஸ்டி சார்பில்பண்பின் சிகரம் என்ற பட்டமும், மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கம் சார்பில் வீரத்தமிழன் என்ற பட்டமும் ஒ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது. அவ்விழாவிலும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருகை தருமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுக்க மறக்கவில்லை.

    English summary
    Tamilnadu dy CM O Pannerselvam getting any awards in US where he is on the government tour.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X