வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவிலிருந்து தன்னையே காத்துக் கொள்ளாதவர் டிரம்ப்.. எங்கிருந்து மக்களை காப்பார்?- ஒபாமா விளாசல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனாவிலிருந்து தன்னையே காத்துக் கொள்ளாத அதிபர் டிரம்ப் எப்படி அந்த கொடிய நோயிலிருந்து மக்களை எப்படி காப்பார் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் குடியுரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிலடெல்பியாவில் பிரசாரம் மேற்கொண்ட ஒபாமா பேசுகையில் அமெரிக்கா ஒரு ஒழுக்கமான இடம்.

 கொரோனா தடுப்பூசி என்ன தேர்தல் லாலிபாப்பா?.. அது உயிர் காக்கும் மருந்தில்லையா?.. காங். விளாசல் கொரோனா தடுப்பூசி என்ன தேர்தல் லாலிபாப்பா?.. அது உயிர் காக்கும் மருந்தில்லையா?.. காங். விளாசல்

சப்தம்

சப்தம்

ஆனால் நாம் மிகவும் முட்டாள்தனத்தையும் சப்தத்தையும் பார்த்துவிட்டோம். பணியின் முக்கியத்தை உணர்ந்து பணியாற்ற இயலாதவர் டிரம்ப். தன்னையே காப்பாற்றிக் கொள்ல டிரம்பால் முடியவில்லை. இதில் அவர் எப்படி மக்களை காப்பாற்றுவார்.

நாட்டை வெளியேற்ற

நாட்டை வெளியேற்ற

இந்த இருண்ட காலங்களிலிருந்து இந்த நாட்டை வெளியேற்றுவதற்கான ஜோபிடனின் திறமையையும் கமலாவின் திறமையையும் நம்புங்கள். நாட்டை மீண்டும் சிறப்பாக உருவாக்க எங்களுக்கு உதவுங்கள். 8 மாதங்களாக நம் நாட்டில் கொரோனா பரவல் உள்ளது.

டிரம்ப் தவறிவிட்டார்

டிரம்ப் தவறிவிட்டார்

இதை கட்டுப்படுத்த டிரம்ப் தவறிவிட்டார். கொரோனாவிலிருந்து நம்மைக் காக்க அவர் முதல் படியைக் கூட எடுத்து வைக்கவில்லை. எந்த வேலை செய்வதிலும் டிரம்ப் ஆர்வம் காட்டுவது இல்லை. டிரம்பிற்கு சீனாவில் வங்கிக் கணக்கு உள்ளது என ஒபாமா கடுமையாக டிரம்பை விமர்சனம் செய்தார்.

அதிபர்

அதிபர்

ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என டிரம்ப் விமர்சனம் செய்து வருகிறார். நேற்றைய தினம் பெனிசில்வானியாவில் டிரம்பும், ஒபாமாவும் தேர்தல் பிரசாரத்தை தனித்தனியே செய்தார்கள்.

English summary
Ex President Barack Obama slams Donald Trump for his coronavirus death with.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X