வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Fawad hussain trolls Howdy Modi

    வாஷிங்டன்: ஹவுடி மோடி நிகழ்ச்சி, ஒரு ஃப்ளாப் ஷோ என்று, பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சவுத்ரி ஃபவாத் உசேன் தெரிவித்துள்ளார்.

    ஹூஸ்டனில் நேற்று, நடந்த ஹவுடி மோடி திட்டத்தின் வெற்றியை முழு உலகம் முழுக்க சிலாகித்து வருகிறது. பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்பும் பாகிஸ்தானுக்கு பயங்கரவாதம் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.

    Pakistan minister Ch Fawad Hussain trolls howdy modi

    இந்த நிகழ்ச்சியின் வெற்றியைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சவுத்ரி ஃபவாத் உசேன் இதை ஒரு தோல்வி என்று கூறி தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

    முன்னதாக, சந்திரயான் -2 குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய ட்வீட்களை இவர் வெளியிட்டு வாங்கி கட்டிக் கொண்டவர் ஆகும்.

    தீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்தீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்

    இந்தியாவுக்கு எதிராக அடிக்கடி சர்ச்சைக்குரிய ட்வீட் செய்வதை வாடிக்கையாக கொண்ட, ஃபவாத் உசேன், ஹவுடி மோடி பற்றி ட்வீட் செய்துள்ளார், ' அமெரிக்கா, கனடா மற்றும் பிற இடங்களிலிருந்து மக்களை அழைத்துவர, பல பில்லியன் ரூபாய் செலவழித்த பிறகும், ஏமாற்றமளிக்கும் நிகழ்ச்சியாக முடிந்துள்ளது. பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது என்பதை இது காட்டுகிறது. ' இவ்வாறு அவர் ட்வீட் செய்துள்ளார்.

    அமெரிக்காவை அடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது, அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கண்டுகொள்வார் யாரும் இல்லை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி விமானத்தில் நியூயார்க்கிற்கு வந்தபோது, ​​அவரை வரவேற்க பெரிய அமெரிக்க அதிகாரி யாரும் வரவில்லை.

    அமெரிக்காவில் மோடி பெற்ற பிரமாண்ட வரவேற்பு மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது கவனம் செலுத்தாமை போன்றவற்றால் பாகிஸ்தான் அமைச்சர் அதிர்ச்சியடைந்துள்ளார் என தெரிகிறது. அமெரிக்கா காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுடன் கைகோர்ப்பதை பார்த்த பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத், "காஷ்மீர் விஷயத்தில் அமெரிக்காவை நம்ப முடியாது" என்றார். இந்த பிரச்சினையில் சீனா மட்டுமே நெருங்கிய நண்பர் என்று ரஷீத் வர்ணித்துள்ளார்.

    English summary
    Hopeless show by ModiJanta after spending Billions of Rs this is what they could gather from all over USA Canada and beyond, shows money can’t buy everything #ModiInHouston, says Pakistan minister Ch Fawad Hussain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X