வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கைவிட்ட சீனா.. கண்டுகொள்ளாத மலேசியா.. சர்வதேச அரங்கில் துருக்கியால் தப்பிய பாகிஸ்தான்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பாகிஸ்தானை தொடர்ந்து சாம்பல் பட்டியலில் வைத்திருக்க பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (FATF) முடிவு செய்துள்ளது. .பயங்கரவாத நிதியுதவியை முழுவதுமாக கண்காணிக்க பாகிஸ்தானுக்கு மொத்தம் 27 செயல் திட்ட நிபந்தனைகளை எஃப்ஏடிஎஃப் வழங்கியிருந்தது. அதில் 21ஐ மட்டுமே நிறைவு செய்திருந்ததால் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது,

சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கண்காணிப்புக் குழுவான நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்ட 27 அம்ச செயல் திட்டத்தில் ஆறு விஷயங்களை ஏற்றுக்கொள்ள தவறியதற்காக அந்த நாட்டை சாம்பல் பட்டியலில் வைத்திருக்க உத்தரவிட்டது.

இந்த தகவலை ஆன்லை ஊடகவியாளர்கள் சந்திப்பில் . FATF தலைவர் மார்கஸ் பிளேயர் தெரிவித்தார். "பாகிஸ்தான் 27 இல் 21 ஐ நிறைவு செய்துள்ளது.. பாகிஸ்தான் ஒரளவு முன்னேற்றம் அடைந்துள்ளது, ஆனால் அது இன்னும் செய்ய வேண்டும்" என்றார்.

பாகிஸ்தானின் நல்ல பணிகளை உறுப்பினர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று FATFவிடம் துருக்கி முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.. 27 செய்ல்திட்டங்களில் மீதமுள்ள ஆறு பணிகள் முடிவடையும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, அதன் மதிப்பீட்டை முடிக்க நிதி நடவடிக்கை பணிக்குழு, பாகிஸ்தானுக்கு குழுவை அனுப்ப வேண்டும் என்று துருக்கி பரிந்துரைத்தது.

'வெண்ணை திரண்டு வரும் நேரத்தில்.. ஸ்டாலின் அறிவிப்பால் கொதித்த எடப்பாடி.. பரபரப்பு அறிக்கை'வெண்ணை திரண்டு வரும் நேரத்தில்.. ஸ்டாலின் அறிவிப்பால் கொதித்த எடப்பாடி.. பரபரப்பு அறிக்கை

சாம்பல் பட்டியல்

சாம்பல் பட்டியல்

பொதுவாக FATF இன் ஆன்-சைட் குழுக்கள், செயல் திட்டங்களை முடித்த பின்னரே ஆய்வுகள் செய்ய அனுமதிக்கின்றன. ஏனெனில் பொதுவாக இதுபோன்ற நடவடிக்கை என்பது அந்த நாட்டை சாம்பல் அல்லது கருப்பு பட்டியலிலிருந்து வெளியேற்றுவதற்கான அறிகுறியாகும். அதைத்தான் துருக்கி பாகிஸ்தானுக்கு எதிர்பார்க்கிறது.

மலேசியாவும் ஆதரிக்கவில்லை

மலேசியாவும் ஆதரிக்கவில்லை

ஆனால் பாகிஸ்தானை ஆய்வு செய்வதற்கான துருக்கியின் முன்மொழிவை FATF இன் 38 உறுப்பினர்களில் எவரும் ஆதரிக்கவில்லை. அப்படி ஆதரிக்காமல் போன உறுப்பினர்கள் நாடுகளில் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, மலேசியா மற்றும் சவுதி அரேபியா ஆகியவை அடங்கும்.

சாம்பல் பட்டியல்

சாம்பல் பட்டியல்

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளும் பாகிஸ்தானின் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுத்ததில் திருப்தி அடையவில்லை. அந்த நாடுகள் தொடர்ந்து தீவிரவாதிகள், தீவிரவாதகுழுக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தானை வலியுறுத்தி வருகின்றன. இதை செய்தால் மட்டுமே சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்குவோம் என அவை பிடிவாதமாக உள்ளன.

பாகிஸ்தானுக்கு சிரமம்

பாகிஸ்தானுக்கு சிரமம்

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக இருந்தால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து நிதி உதவி பெறுவது பாகிஸ்தானுக்கு கடினமாகி விடும் என்பதால் பாகிஸ்தான் அந்த பட்டியலில் இருந்து வெளிவர போராடி வருகிறது.

English summary
pakistan will remain on the Financial Action Task Force (FATF) grey list. The decision was taken in the FATF's plenary session after Islamabad failed to comply with all 27 parameters set by the task force.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X