வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் மரணம்-வீடியோ

    வாஷிங்கடன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பால் ஆலன் புற்றுநோயால் காலமானார்.

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸுடன் சேர்ந்து நிறுவியர் பால் ஆலன்(65). 1975ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை துவங்கியபோது ஆலனுக்கு 22 வயது, பில் கேட்ஸுக்கு 19 வயது. அந்த நிறுவனம் மூலம் கம்ப்யூட்டர் மூலமாக புதிய புரட்சியை செய்து பெரும் பணக்காரர்கள் ஆனார்கள்.

    Paul Allen is no more

    8 ஆண்டுகள் கழித்து ஆலன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அவருக்கும், கேட்ஸுக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது. 2009ம் ஆண்டு புற்றுநோயுடன் போராடி வென்றார் ஆலன்.

    [சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு, ரூ. 80ஐ தாண்டிய டீசல் விலை]

    இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் மீண்டும் வந்துவிட்டதாக இந்த மாத துவக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த ஆலன் திங்கட்கிழமை மதியம் சியாட்டிலில் உயிர் இழந்தார்.

    உலக பணக்காரர்கள் பட்டியிலில் ஆலனின் பெயரும் இருந்தது. நேற்று மதியம் வரை அவர் ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 20 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 44வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Microsoft co-founder and billionaire Paul Allen dies of cancer on monday in Seattle.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X