வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பென்டகன் மீது தாக்குதல்.? பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ராணுவ தலைமையிடமான பென்டகன் அருகே துப்பாக்கிச்சூடு நடந்துள்ள நிலையில், பென்டகனில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

Pentagon On Lockdown After Reports Of Shooting At Nearby Subway Station

அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன் தலைநகர் வாஷிங்டனின் அர்லிங்டன் பகுதியில் அமைந்துள்ளது. உலகின் அதி நவீன ராணுவத்தின் தலைமையிடமான பென்டகனில் பொதுவாகவே பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

இந்நிலையில், இன்று பென்டகன் அருகே அமைந்துள்ள உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது போன்ற தகவல்கள் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை.

Pentagon On Lockdown After Reports Of Shooting At Nearby Subway Station

இதனால் பென்டகனை சுற்றியுள்ள பகுதியில் பொது முடக்கம் - லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பென்டகன் ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் பென்டகன் அருகே வர வேண்டாம் என Pentagon's security force ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

Pentagon On Lockdown After Reports Of Shooting At Nearby Subway Station

துப்பாக்கிச் சூடு நடந்த ரயில் நிலையம் பென்டகன் தலைமை கட்டிடத்தில் இருந்து வெறும் சில மீட்டர்கள் மட்டுமே தூரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சில மணி நேரத்திற்கு பிறகு, பென்டகனில் அம்லபடுத்தப்பட்ட லாக்டவுன் விலக்கிக் கொள்ளப்பட்டதாக Pentagon's security force ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் விரைவாக தொடர்பு கொள்ள ஹாட்லைன்.. வடக்கு சிக்கிம் செக்டாரில் அமைப்பு இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் விரைவாக தொடர்பு கொள்ள ஹாட்லைன்.. வடக்கு சிக்கிம் செக்டாரில் அமைப்பு

English summary
Pentagon was on lockdown Tuesday after reports of a shooting at a subway station just outside the secure US military headquarters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X