• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

வானிலிருந்து தீ பிடித்து நொறுங்கி விழுந்த விமானம்.. 21 பயணிகளும் பாதுகாப்பாக வெளியே வந்த அதிசயம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: டேக் ஆப் ஆகும்போதே நொறுங்கி விழுந்தது ஒரு விமானம். அதிருஷ்டவசமாக, அதில் பயணித்த 21 பயணிகளும் உயிரோடு தப்பியுள்ளனர்.

இந்த அதிசய சம்பவம் பற்றிதான் அமெரிக்கா முழுக்க பேச்சாக உள்ளது.

மெக்டொன்னல் டக்லஸ் எம்டி-87 என்ற வகை விமானம், ப்ரூக்ஷையர் ஹட்சன் எக்சிகியூட்டிவ் விமான நிலையத்திலிருந்து நேற்று டேக் ஆப் ஆனபோது, திடீரென தீ வெளியாகியுள்ளது. இது ஒரு ட்வின் என்ஜின் ஜெட் விமானமாகும்.

Rain alert: அடுத்த 3 நாட்களுக்கு அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. தமிழகம் & கேரளாவுக்கு எச்சரிக்கைRain alert: அடுத்த 3 நாட்களுக்கு அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. தமிழகம் & கேரளாவுக்கு எச்சரிக்கை

21 பயணிகள்

21 பயணிகள்

தீ வந்த சில விநாடிகளில் விமானம் வெடித்துச் சிதறி கீழே பாய்ந்துள்ளது. கீழே விமானம் விழுந்ததும், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதிருஷ்டவசமாக விமானத்தில் இருந்த 3 பணியாளர்கள் உட்பட 21 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். அவர்களுக்கு பெரிய அளவில் அடி படவில்லை. இது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

விமானம் முழுக்க எரிந்தது

விமானம் முழுக்க எரிந்தது

விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து அதன் முக்கால்வாசி பகுதி, அதாவது வால் பகுதியை தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தீயால் எரிந்து சாம்பலாகி உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், வெளியாகியுள்ளன. டயர்கள் தனியாக கழன்று கிடக்கின்றன. இப்படி ஒரு மோசமான விபத்து நடந்த போதிலும் கூட அதில் பயணித்த 21 பேரும் உயிரோடு பிழைத்துள்ளார்கள் என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஒரு பயணிக்கு காயம்

ஒரு பயணிக்கு காயம்

அதேநேரம் ஒரே ஒரு பயணி மட்டும் அதிகமாக காயமடைந்த இருக்கிறார். அவருக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் கிடையாது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணமடைந்து அவர் வீடு திரும்புவார் என்று விமானத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேஸ்பால் விளையாட்டு போட்டி

பேஸ்பால் விளையாட்டு போட்டி

ஹட்சன் அஸ்ட்ரோஸ் மற்றும் பாஸ்டன் ரெட் சாக்ஸ் அணிகள் இடையேயான பேஸ்பால் பிளேஆப் போட்டிகளை பார்க்க சென்றவர்களை இறக்கி விடுவதற்காக இந்த விமானம் கிளம்பியதாக கூறப்படுகிறது.

நேர்மறை எண்ணம்

நேர்மறை எண்ணம்

வால்டர் ஹாரிஸ் கவுண்டி அவசர சேவைகள் இயக்குனர் டிம் கிப்சன் இதுபற்றி கூறுகையில், பயணிகள் மற்றும் குழுவினர் இந்த சம்பவத்தில் ஆபத்தில்லாமல் தப்பியதை நினைத்து வியப்படைந்தனர், அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர். நாம் எப்போதும் மோசமான விஷயங்களைத்தான் எதிர்பார்ப்போம், ஆனால், இன்று சிறந்ததை எதிர்பார்த்திருக்கிறோம். இந்த சம்பவத்திலிருந்து நம்பிக்கையோடு இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

English summary
A plane crashed at takeoff on Tuesday in Texas, with all 21 passengers and crew on board scrambling to safety before the aircraft burst into flames.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X