வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்ல செய்தி.. கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை.. நம்பிக்கை அளிக்கும் அமெரிக்க மருத்துவர்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூரணமாக குணமடைந்த நோயாளிகளிடமிருந்து ஆன்டிபாடி பிளாஸ்மாவை தானமாக பெற்று, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உட்செலுத்துவதன் மூலம் அவர்களை குணப்படுத்த முடியும் என்று அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் பகீம் யூனஸ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா வைரஸின் வீக் பாயிண்டை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், "உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு சில நாட்களிலும் கோவிட் -19 என்று அழைக்கப்படும் கொரோனா நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள். இந்த சூழலில் கொரோனா வைரஸ் நோயை தடுக்க எந்தவொரு தடுப்பூசியும் இல்லை, எந்த மருந்துகளும் செயல்படவில்லை.

    ஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு சிறந்த நம்பிக்கைக்குரிய சிகிச்சை எங்களிடம் உள்ளது: அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூரணமாக குணமடைந்த நோயாளிகளிடமிருந்து ஆன்டிபாடி பிளாஸ்மாவை தானமாக பெற்று, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உட்செலுத்துவதன் மூலம் குணப்படுத்த முடியும்.

    கொரோனா நோயாளிகள்

    கொரோனா நோயாளிகள்

    கடந்த மாதம் ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், சீனாவின் ஷென்சனில் மோசமாக நோய்வாய்ப்பட்ட ஐந்து கொரோனா வைரஸ் நோயாளிகள் வென்டிலேட்டர்கள் உதவியுடன் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு கொரோனாவில் இருந்து குணமானவர்களின் பிளாஸ்மாவை செலுத்தி சிகிச்சை அளித்த பின்னர் விரைவாக உடல் நலம் தேறினார்கள் . அடுத்த சில நாட்களில், அவர்கள் நலமடையத் தொடங்கினர். இறுதியில், அவர்களில் 3 பேர் பூரணமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், மேலும் இருவர் நல்ல உடல் நிலையோடு தற்போது மருத்துவமனையில் சிசிச்சை பெற்று தேறிவருகிறார்கள்.

    டிப்தீரியா நோய்

    டிப்தீரியா நோய்

    இந்த பிளாஸ்மாக சிகிச்சை முறை முற்றிலும் பழமையானது. டாக்டர்கள் முதன்முதலில் 1890 களில் டிப்தீரியா நோய்க்கு எதிராக பிளாஸ்மாவின் அடிப்படை நுட்பத்தைப் பயன்படுத்தினர். நோய்த்தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்ட ஒருவரிடமிருந்து அதே நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஆன்டிபாடி நிறைந்த பிளாஸ்மா மாற்றப்படுவதால் இது "செயலற்ற ஆன்டிபாடி சிகிச்சை" என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய ஆண்டிபயாடிக் (மருந்து) காலத்திற்கு முந்தைய காலத்தில் ஆண்டுதோறும் 45,000 டிப்தீரியா நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

    பிளாஸ்மாவின் பங்கு

    பிளாஸ்மாவின் பங்கு

    மிக சமீபத்திய ஆய்வுகளின் முடிவுகளும் நம்பிக்கைக்குரியவையாகவே வந்திருக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில்,கடுமையான எச் 1 என் 1 இன்ஃப்ளூயன்ஸா கொண்ட 93 நோயாளிகளில் பிளாஸ்மாவை பெற்றவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே இறந்தனர். இதேபோல் 2003 ஆம் ஆண்டில், கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி கொண்ட 1,775 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த SARS தொடர்பான 17 சதவிகித இறப்பு விகிதத்துடன் ஒப்பிட்டால், சுறுசுறுப்பான பிளாஸ்மாவைப் பெற்றவர்களில் 12.5 சதவீதம் பேர் மட்டுமே இறந்தனர். SARS மற்றும் பிற வைரஸ்களால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மாவைப் பயன்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பான 32 க்கும் மேற்பட்ட விரிவான பகுப்பாய்வுகளில் இறப்பை பெரும் அளவு குறைப்பதில் பிளாஸ்மா பெரும் பங்கு வகித்திருப்பது தெரியவந்துள்ளது.

    சிறந்த முயற்சி

    சிறந்த முயற்சி

    பிளாஸ்மா சிகிச்சை பல நன்மைகளை வழங்கும். ஏனெனில் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்க 12 முதல் 18 மாதங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. பிளாஸ்மா இப்போது நமக்கு கையில் கிடைக்கிறது. வைரஸ் தடுப்பு மருந்துகளின் விலை (கிடைக்கும்போது) காரணமாக நோயாளிகளுக்கு அணுகல் சிக்கல்களை உருவாக்கக்கூடும். எல்லாவற்றையும் ஒப்பிடும் போத பிளாஸ்மா மலிவானது. கொரோனா வைரஸ் சோதனைகள், முகமூடிகள், முகக் கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் அனைத்தும் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் பிளாஸ்மா ஏராளமாக உள்ளது. அதிகமான நோயாளிகள் குணமடையும்போது இன்னும் அதிகமான பிளாஸ்மா கிடைக்கும். எனவே கொரோனவுக்கு எதிரான ஒரு பயனுள்ள தடுப்பூசி வருவதற்கு முன்பு, தொற்றுநோய்க்கு எதிரான மற்றொரு அதிரடி நடவடிக்கையாக நோயில் இருந்து குணம் அடைந்தவர்களின் சுறுசுறுப்பான பிளாஸ்மாவை கொரோனா நோயாளிககளுக்கு செலுத்தி குணமடைய வைக்கலாம். இப்போதைக்கு இது சிறந்த முயற்சியாக இருக்கும்.

    நண்கொடை அளிக்கலாம்

    நண்கொடை அளிக்கலாம்

    எனவே மேற்கண்ட காரணங்கள் போதுமானதாக இருந்ததால் அமெரிக்காவின் தேசிய உணவு மற்றும் மருந்து நிர்வாகம், வெள்ளிக்கிழமை அன்று தங்களிடம் உள்ள கோவிட் -19 நோயாளிகளுக்கு சுறுசுறுப்பான பிளாஸ்மாவைப் பயன்படுத்த மருத்துவர்களுக்கு அனுமதி அளித்தது . ஆர்வமுள்ள மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக 34 நிறுவனங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஒரு மல்டிஸ்டேட் கூட்டமைப்பு ஏற்கனவே ஒரு விரிவான வலைத்தளத்துடன் நேரலையை தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் நாடு முழுவதும் உள்ள குணமடைந்த கொரோனா வைரஸ் நன்கொடையாளர்களிடமிருந்து சுறுசுறுப்பான பிளாஸ்மாவை சேகரிக்கத் தொடங்கியது.

    மூன்று பிளாஸ்மோ டோஸ்

    மூன்று பிளாஸ்மோ டோஸ்

    பிளாஸ்மாவை நன்கொடை அளிப்பவர்கள் கொரோனா தாக்கிய மீண்ட பின்னர் 14 நாட்களுக்கு அறிகுறி இல்லாதவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நன்கொடையாளரும் மூன்று பிளாஸ்மா டோஸ் வரை வழங்க முடியும். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 19,000 நோயாளிகள் கோவிட் -19 இலிருந்து மீண்டுள்ளனர், " இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Plasma from recovered patients could help treat coronavirus until we find a vaccine
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X