வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார். இரு நாட்டு தலைவர்கள், வர்த்தகம் , பரஸ்பரம் நட்பு, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசினார்கள்.

நான்கு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சென்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

மேலும் 3 கிலோ தங்கம் சிக்கியது.. சிக்கலில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்.. ஏன்? மேலும் 3 கிலோ தங்கம் சிக்கியது.. சிக்கலில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்.. ஏன்?

வெள்ளை மாளிக்கைக்கு காரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள பார்வையாளர்கள் வருகை பதிவேட்டில் சென்று கையெழுத்திட்டார். அதன்பின்னர் அதிபர் ஜோ பைடனின் அறைக்கு அதிகாரிகள் அழைத்து சென்றார்கள். அப்போது அதிபர் பைடன், பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிரான பின் ஜோ பைடனை சந்திப்பது இது முதல் முறையாகும்

நன்றி கூறினார்

நன்றி கூறினார்

வரவேற்புக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் . வர்த்தகம் , பரஸ்பரம் நட்பு, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசினார்கள். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறும் போது, எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி கூறுகிறேன. இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவுகளுக்கு அதிபர் பைடன் முழு அக்கறை காட்டினார். அதிபர் பைடன் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு விஷயமும் இந்தியா-அமெரிக்கா நட்புக்கு முக்கியமானவை.

காந்திஜியின் போதனை

காந்திஜியின் போதனை

கொரோனா வைரஸ் தொற்று குறைப்பு. பருவநிலை மாற்ற பிரச்சனையில் பைடன் பங்கு அளப்பரியது. குவாட் அமைப்பிலும் அதிபர் பைடனின் பங்கு சிறப்பாக இருந்தது. அதிபர் ஜோ பைடன் காந்திஜியின் நினைவுகளை பற்றி குறிப்பிட்டு காந்திஜியின் போதனைகளை பற்றி பேசினார். காந்திஜியின் போதனைகள் தான் எதிர்காலத்தில் நமது உலகிற்கு மிகவும் முக்கியமானது,

வர்த்தகம்

வர்த்தகம்

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவருக்கொருவர் தேவைகளை பூர்த்தி செய்யலாம். அமெரிக்காவிடம் பல விஷயங்கள் உள்ளன, அவை இந்தியாவுக்குத் தேவை மற்றும் இந்தியாவுடன் பல விஷயங்கள் அமெரிக்காவிற்கு பயனுள்ளதாக இருக்கும். வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மேம்படும்.

இந்தியா அமெரிக்கா

இந்தியா அமெரிக்கா

உலகளாவிய சவால்களை தீர்க்க அமெரிக்க-இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என்று நான் நீண்ட காலமாக நம்புகிறேன். உண்மையில், 2006 ஆம் ஆண்டில், 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் மிக நெருக்கமான நாடுகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் கூறியிருந்தேன். அது நடந்துள்ளது" இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்,

English summary
Prime Minister Narendra Modi receives a warm welcome from US President Joe Biden at the White House
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X