வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா வந்தார் பிரதமர் மோடி.. இன்று துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேச்சு

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை வாஷிங்டன் வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று இரவு பிரதமர் மோடி, அமெரிகக துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேசுகிறார்.

Recommended Video

    Modiயின் America Quad பயணம்! 5 CEOsஐ சந்திக்கிறார் | OneIndia Tamil

    அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 25ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்து கொள்கிறார்கள்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்த பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
    இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்.

    பிரதமர் மோடி அமெரிக்க பயணம்.. ஆப்கனுக்கு நோ, பாகிஸ்தானுக்கு யெஸ்.. திடீர் முடிவுக்கு என்ன காரணம்??பிரதமர் மோடி அமெரிக்க பயணம்.. ஆப்கனுக்கு நோ, பாகிஸ்தானுக்கு யெஸ்.. திடீர் முடிவுக்கு என்ன காரணம்??

    ஆப்பிள் சிஇஒ

    ஆப்பிள் சிஇஒ

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்-ஐயும் அவர் சந்தித்து பேசுகிறார்.

    சந்தித்து பேசுகிறார்

    சந்தித்து பேசுகிறார்

    அத்துடன் இன்றைய தினமே இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்சை மோடி சந்தித்து பேச உள்ளார். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவியேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச உள்ளது இதுவே முதல் முறையாகும்.

    பங்கேற்கிறார்

    பங்கேற்கிறார்

    நாளை வாஷிங்டனில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் குவாட் அமைப்பு தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்,

    பைடனை சந்திக்கிறார்

    பைடனை சந்திக்கிறார்

    இதனிடையே செப். 24ஆம் தேதி, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இருதரப்பு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்ததுல், பயங்கரவாத அச்சுறுத்தல், ஆப்கானிஸ்தான் நிலவரம், ஆகிய விஷயங்கள் குறித்து பேசுகிறார்கள். அத்துடன், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஐநா சபையில் பேசுகிறார்

    ஐநா சபையில் பேசுகிறார்

    24ம்தேதி அன்று வாஷிங்டன் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, நியூயார்க் நகருக்கு செல்கிறார். 25ஆம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் 76ஆவது அமர்வில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள் பங்கேற்கிறார்கள். . இந்த கூட்டத்தில் பயங்கரவாதத்தால் உலகம் எதிர்கொண்டுள்ள சவால்கள், ஆப்கானிஸ்தான் விவகாரம், ஐ.நா. சபையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 26ம் தேதி இந்தியா திரும்புகிறார்.

    நெகிழ்ச்சி பதிவு

    நெகிழ்ச்சி பதிவு

    இதனிடையே அமெரிக்க பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டிருந்த பதிவில், அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவுக்கு 4 நாள் அரசு முறை பயணம் செல்ல உள்ளேன். இந்த பயணத்தில், இந்தியா-அமெரிக்கா இடையேயான உலகளாவிய கூட்டுறவு குறித்து பைடனுடன் ஆலோசிக்க உள்ளேன். மேலும், பிராந்திய மற்றும் உலக விவகாரங்களில் பரஸ்பர நலன்களுக்கான எங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள உள்ளோம். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பையும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

    குவாட் மாநாடு

    குவாட் மாநாடு

    இந்த சந்திப்பின் மூலம் இருதரப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குவாட் மாநாட்டில் அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோருடன் முதல் முறையாக நேரில் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்த பயணம் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுடனான நமது உறவை மேலும் பலப்படுத்தும்" என்று கூறியிருந்தார்.

    English summary
    Prime Minister Narendra Modi, who left Delhi yesterday on a private plane, arrived in Washington this morning. He was given an enthusiastic welcome. Tonight, Prime Minister Modi will meet US Vice President Kamala Harris. Meets US President Biden tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X