வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ச்சுக்கு நடந்து சென்ற டிரம்ப்.. பாதுகாப்பிற்காக போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீசிய போலீஸ்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேவாலயத்திற்கு நடந்து செல்லும் போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க வெள்ளை மாளிகை அருகே போராட்டம் நடத்தியவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் போலீஸார் பயன்படுத்தி அவர்களை கலைத்தனர்.

Recommended Video

    அமெரிக்காவில் என்ன நடக்கிறது? விளக்குகிறார் நமது செய்தியாளர்

    கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கடந்த 24 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரது கழுத்தில் முழங்காலால் நெரித்து போலீஸ் அதிகாரி கொலை செய்தார்.

    கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் இந்த படுகொலைகள் அமெரிக்காவில் தொடர்கதையாகி வருகிறது. இதை கண்டித்து அமெரிக்காவே கலவரப்பூமியாக மாறியுள்ளது. பிளாய்டின் கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டங்கள் வலுத்துள்ளன.

    கருப்பின இளைஞர் இறப்பு ஒரு இனப்படுகொலை.. பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன? கருப்பின இளைஞர் இறப்பு ஒரு இனப்படுகொலை.. பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?

    டிரம்ப்

    டிரம்ப்

    6ஆவது நாளாக வலுத்துள்ள போராட்டம் குறித்து ரோஸ் கார்டனில் டிரம்ப் பேசுகையில் அமெரிக்கா முழுவதும் நடக்கும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவேன். ஒரு நகரிலோ அல்லது மாகாணத்திலோ வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றால் அதை ஒடுக்க தேசிய பாதுகாப்பு படையினரை குவிக்க வேண்டியது மேயர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள்.

    அமெரிக்க படைகள்

    அமெரிக்க படைகள்

    அவ்வாறு தேசிய பாதுகாப்பு படைகளை அழைக்க மறுத்தால் பொது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக அமெரிக்க ராணுவத்தை குவிப்பேன். அப்போதுதான் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என தெரிவித்திருந்தார்.

    புகை மூட்டம்

    புகை மூட்டம்

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளை மாளிகை முன்பு குவிந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த முக்கிய கட்டடத்தின் ஜன்னல்கள் மற்றும் கார்களை தீவைத்து கொளுத்தினர். இதனால் வெள்ளை மாளிகையை சுற்றி புகை மூட்டமாக இருந்தது.

    கண்ணீர் புகை

    கண்ணீர் புகை

    இந்த நிலையில் டிரம்ப் அங்கிருந்த பங்கரில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவர் வெள்ளை மாளிகை அருகே உள்ள செயிண்ட் ஜான் எபிஸ்கோபல் தேவாலயத்திற்கு நடந்து செல்லவிருந்தார். அப்போது அவரது பாதுகாப்பு கருதி போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டையும் ரப்பர் குண்டுகளையும் வீசினர்.

    துப்பாக்கிச் சூடு

    துப்பாக்கிச் சூடு

    இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்த பிறகு கையில் பைபிளுடன் டிரம்ப் தேவாலயத்திற்கு நடந்து சென்றார். போராட்டக்காரர்களை குண்டர்கள் என்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடுவேன் என்றும் டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Police uses tear gas and rubber bullets to disperse the protestors to make a way for Trump who went to Church near White House.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X