வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன் லைன் கல்வி...வெளிநாட்டு மாணவர்கள் புதிய தடை... ட்ரம்ப்பின் அடுத்த அஸ்திரம்!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்:அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஆன் லைன் வகுப்பில் புதிய வெளிநாட்டு மாணவர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அமெரிக்க குடியமர்வு மற்றும் சுங்க இலாகா வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் இன்னும் கொரோனா தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், அமெரிக்கர்களுக்கு சாதகமான பல்வேறு நடவடிக்கைகளை அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்து வருகிறார். வெளிநாட்டினருக்கு பல்வேறு வகையான விசா அனுமதிகளை முதலில் ரத்து செய்தார்.

President Donald Trump announces no New Foreign Students for All-online Classes

வெளிநாட்டு மாணவர்களுக்கான படிப்பு ஆன் லைனில் கற்பிக்கப்படும் என்று பல்வேறு கல்வி நிலையங்கள் தெரிவித்து இருந்தன. இதையடுத்து அவர்களது விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதை எதிர்த்து ஹார்வார்டு, எம்ஐடி உள்பட 18 மாநிலங்களில் இருக்கும் கல்வி நிலையங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது. இதையடுத்து, இந்த உத்தரவை ட்ரம்ப் நிர்வாகம் திரும்ப பெற்றது. கொரோனா தொற்றுக்கு இடையே கல்வி நிலையங்களை திறப்பதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ட்ரம்ப் அதுமாதிரியான முடிவுகளை எடுத்து இருந்தார்.

வரும் நவம்பரில் அதிபருக்கான தேர்தல் அந்த நாட்டில் நடக்கவிருப்பதால், அதற்குள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் மறைமுக நெருக்கடியும் கொடுத்து வருகிறார். ஆன் லைன் தவிர்த்து பள்ளிக்கு வர வேண்டும் என்பது அதிபரின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், இதற்கு கல்வி நிலையங்கள் அனுமதிக்கவில்லை.

அமெரிக்காவில் 2018-19 கல்வி ஆண்டில் பத்து லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் என்று சர்வதேச கல்வி நிறுவனம் புள்ளி விவரம் அளித்துள்ளது. இவர்களிடம் இருந்து கிடைக்கும் டியூசன் கட்டணத்தில் இருந்துதான் கல்வி நிலையங்கள் நடத்தப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

கொரோனா பீதி.. சிறையில் தானே சமைத்து சாப்பிடும் சசிகலா?.. அதிகாரிகள் கூறுவது என்ன?கொரோனா பீதி.. சிறையில் தானே சமைத்து சாப்பிடும் சசிகலா?.. அதிகாரிகள் கூறுவது என்ன?

கொரோனாவின் வீரியம் இன்னும் அமெரிக்காவில் குறையாத நிலையில், இறுதி செமஸ்டர் இருக்குமா, இருக்காதா என்பது குறித்து பெரும்பாலான கல்லூரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், 2020-21 கல்வியாண்டில் ஆன் லைனில் வகுப்புகள நடத்தப்படும் என்று ஹார்வார்டுஅறிவித்துள்ளது.

Recommended Video

    அமெரிக்காவின் Houston- ல் சீன தூதரகம் அதிரடியாக மூடல்

    அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிகளவில் கொரோனாவுக்கு 144,000 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    English summary
    President Donald Trump announces no New Foreign Students for All-online Classes
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X