வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு நாட்டின் தலைவனுக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும்.. மகிழச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகப்போர்களில் கூட இப்படி ஒரு இக்கட்டான நிலையை அமெரிக்கா சந்தித்து இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. உலகத்தையே ஒரு சில நாளில் அணுகுண்டுகளால் அழிக்கும் வல்லமை படைத்த அமெரிக்கா, கண்ணுக்கே தெரியாத ஒற்றை வைரஸ் கிருமியிடம் சிக்கி சீரழிந்தது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவிற்கு பரவி, அது அந்நாட்டு மக்களில் இதுவரை ஐந்து லட்சம் பேரை கொன்றுள்ளது. கோடிக்கணக்கான மக்களை நோயாளிகளாக்கி நிலைகுலைய வைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா, சீனா மீது தீராத கோபத்துடன், ஆவேசத்துடனும் இன்று வரை உள்ளது.

தமிழகத்தில் தீவிரமடைகிறது லாக்டவுன்.. அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.. 5 முக்கிய தீர்மானங்கள்! தமிழகத்தில் தீவிரமடைகிறது லாக்டவுன்.. அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.. 5 முக்கிய தீர்மானங்கள்!

கொரோனா வைரஸ் சீனாவின் பயோ ஆயுதம் என்றும், அமெரிக்கர்களை கொல்ல செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் அமெரிக்காவில் புகார் எழுந்தது. ஆனால் இதை சீனா திட்டவட்டமாக மறுத்தது. உலக சுகாதார மையமும் இல்லை இல்லை இது இயற்கையான வைரஸ் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தது.

அமெரிக்கா கண்டுபிடிப்பு

அமெரிக்கா கண்டுபிடிப்பு

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பரவலால் மீள முடியாத மோசமான பாதிப்பில் சிக்கிய அமெரிக்கா, தடுப்பூசி கண்டுபிடிப்பதை விரைவு படுத்தியது. பல ஆயிரம் கோடியை அதற்காக ஒதுக்கியது. முதலில் கொரோனா பாதித்தவர்களின் உயிரை காக்க மருந்து கண்டுபிடித்தது. அந்த மருந்துதான் இன்று நாம் நாட்டு மக்கள் எங்காவது கிடைக்குமா தேடி அலையும் ரெம்டெசிவிர். இந்த மருந்து தான் ஆக்சிஜன் தேவையை குறைக்கும் என்று உலகம் முழுவதுமே அதிகமாக நம்பப்படுகிறது. ஆனால் இது உயிர்காக்கும் மருந்து அல்ல.

பாதிப்பு இல்லை

பாதிப்பு இல்லை

அமெரிக்கா அடுத்ததாக தடுப்பூசியை கண்டுபிடித்தது. பைசர் தடுப்பூசி (pfizer covid vaccine ) மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி இதுவரை அந்நாட்டு மக்கள் தொகையில் 35 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டு விட்டது. இதன் மூலம் அவர்களுக்கு இனி கொரோனா பாதிப்பு ஏற்படாது என்று நம்பிக்கை பிறந்துள்ளது.

அமெரிக்கா அதிரடி

அமெரிக்கா அதிரடி

ஏற்கனவே அங்குள்ள 32 கோடி மக்கள் தொகையில் 3.3 கோடி பேரை கொரோனா பாதித்துள்ளது. தற்போதைய நிலையில் 10 கோடிக்கும் அதிகமானோருக்கு இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 70 சதவீதம் மக்களுக்கு ஒரு தவணை தடுப்பூசியை வரும் ஜூலைக்குள் போட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இலக்கு நிர்ணயித்துள்ளார் இதன் மூலம் கொரோனாவை முற்றிலும் வெல்ல முடியும் என்ற நிலையை அமெரிக்கா உருவாக்கி உள்ளது.

அமெரிக்காவில் மாற்றம்

அமெரிக்காவில் மாற்றம்

அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. உயிரிழப்பும் குறைந்துவிடட்து. இதனால் இயல்புநிலை வேகமாக திரும்பி வருகிறது. அமெரிக்காவில் இன்று முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போதோ அல்லது உள் அரங்குகளிலோ இனி முககவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டது அமெரிக்கா

மீண்டது அமெரிக்கா

இதனால் உற்சாகம் அடைந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவிற்கு இன்றைய நாள் சிறப்பான நாள் என்று கூறிவிட்டு, மகிழ்ச்சியுடன் முககவசத்தை கழற்றினார். இதேபோல் அதிபருன் இருந்தவர்களும் முககவசத்தை கழற்றினர். பேரழிவில் இருந்து கிட்டத்தட்ட தற்போது மீண்டுவிட்டதாக அமெரிக்க உற்சாகமாக உள்ளது. மக்கள் சந்தோஷமாக வெளியில் செல்கிறார்கள். கொரோனாவிற்கு முந்தைய வாழ்க்கையை அமெரிக்க மக்கள் வாழத்தொடங்கிவிட்டனர். அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் இன்று இருக்கிறார். ஒரு நாட்டின் தலைவனாக இதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும். தடுப்பூசியை தன் மக்களுக்கு விரைவாக போட வைக்க வேண்டும் என்று அதிபர் பைடன் தீவிர அக்கறை எடுத்ததாலேயே, அந்நாடு கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
“Today is a great day for America," President Joe Biden said during a Rose Garden address heralding the new guidance, an event where he and his staff went without masks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X