வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனாவுக்கு மருந்து என டிரம்ப்புதான் சொல்றாரு.. ஃபாசி சொல்றது வேற!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று பேசுகையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (hydroxychloroquine) மருந்து கொடுத்தால் கோவிட் -19 எனப்படும் கொரோனாவை தடுக்கலாம் என்று கூறினார். ஆனால் டிரம்பின் கருத்தை அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் தடுப்பு மையத்தின் இயக்குனர் அந்தோணி ஃபாசி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் மலேரியாவுக்கு தரப்படும் தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் ஹெச்ஐவி நோயாளிகக்கு தரப்படும் மருந்துகளை கொரோனா வைரஸை நோயாளிகளுக்கு தந்து சோதித்து வருகின்றன.

இந்த மருந்துக்கு நல்ல பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவிலும் இதேபோன்ற சோதகைள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அங்கும் சிலருக்கு நல்ல பலன் அளிப்பதாக கூறப்படுகிறது.

தடுக்கும் மருந்து

தடுக்கும் மருந்து

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் இதே போன்ற மருந்துகளான - குளோரோகுயின் - உலகம் முழுவதும் பல்வேறு பிராண்ட் மற்றும் பொதுவான பெயர்களில் விற்கப்படுகின்றன. அவை அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படலாம் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் உயிரணுக்களுக்குள் நுழைவதற்கு அவை தடுக்கக்கூடும் என்கிறார்கள், மேலும் சில விஞ்ஞானிகள் சோதனைக் குழாய் மற்றும் பிற சிறிய ஆய்வுகளில் சாதகமான அறிகுறிகளைப் பதிவு செய்துள்ளனர்

அமெரிக்கா மறுப்பு

அமெரிக்கா மறுப்பு

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று பேசுகையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (hydroxychloroquine) மருந்து கொடுத்தால் கோவிட் -19 எனப்படும் கொரோனாவை முடியும் என்று நம்புகிறேன் என்றார். இவரது இந்த பேச்சு உலக அரங்கில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. எனினும் அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் தடுப்பு மையம் டிரம்பின் கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அந்தோணி ஃபாசி

அந்தோணி ஃபாசி

அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் தடுப்பு மையத்தின் இயக்குனர் அந்தோணி ஃபாசி இது பற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை தடுக்கவும், பொருளாதார பிரச்சனையை சரி செய்யவும், அதிபராக அவர் எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலை முன்வைப்பதற்கும் நாடு பரவலாகக் கிடைக்கும் மலேரியா மருந்து. பதில் அளிக்கக்கூடும் என்ற தனது உணர்வை டிரம்ப் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் டிரம்பின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விஞ்ஞானம் இன்னும் வளரவில்லை.

நல்ல தகவல் இல்லை

நல்ல தகவல் இல்லை

நீங்கள் சொல்லும் மலேரியா தடுப்பு மருந்து என்பது தகவல் தான். மருத்துவ பரிசோதனைகள் எதிலும் மலேரியா தடுப்பு மருந்துகள் கொரோனாவை கட்டுப்படுத்தும் என உறுதி செய்யப்படவில்லை. எனவே எந்த ஒரு உறுதியான அறிக்கையும் வெளியிட முடியாது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டிற்கு மருந்து கிடைக்க ஒரு வழியைத் தேடுகிறது. ஆனால் உண்மையில் இந்த மருந்துகள் வேலை செய்கிறதா என்பது குறித்து நல்ல தகவல்களை அறிய வேண்டும் என்றார்.

English summary
Trump says hydroxychloroquine could be answer to COVID, but Director of the National Institute of Allergy and Infectious Diseases Dr. Anthony Fauci says not yet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X