வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போராட்டக்காரர்கள் முற்றுகை, தீவைப்பு.. சுற்றிலும் புகை மண்டலமாக காட்சியளித்த வெள்ளை மாளிகை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை நேற்று முற்றுகையிட்டனர். அவர்கள் அருகிலிருந்த கட்டடத்தின் ஜன்னல்களையும் கார்களை தீ வைத்து கொளுத்தியதாக வெள்ளை மாளிகையை சுற்றிலும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

Recommended Video

    வெடித்தது மக்கள் போராட்டம்... சிவில் வார் அச்சத்தில் அமெரிக்கா

    ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞரை கடந்த 25ஆம் தேதி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது ஒரு போலீஸ் அதிகாரி தனது முழங்காலால் ஜார்ஜின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    இதை கண்டித்து அமெரிக்காவின் நியூயார்க், கென்டக்கி, வாஷிங்டன், லாஜ் ஏஞ்சல்ஸ், ஹூஸ்டன், டெக்சாஸ், கொலம்பியா உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் வலுத்தன. இந்த போராட்டத்தின்போது வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்துவது, கடைகளை சூறையாடுவது உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.

    உடனே வெளியே வாங்க டிரம்ப்.. உடனே வெளியே வாங்க டிரம்ப்.. "பங்கரில்" பதுங்கிய அதிபர்.. அமெரிக்க போராட்டத்தை கையில் எடுத்த சீனா!

    சிறிய பூங்கா

    சிறிய பூங்கா

    இந்த போராட்டம் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது. ஜார்ஜ் பிளாய்டுக்கு ஆதரவாக 25 நாடுகளை சேர்ந்த மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள சிறிய பூங்காவில் போராட்டக்காரர்கள் திரண்டனர். அப்போது அவர்கள் எங்களுக்கு கருப்பினத்தை சேர்ந்த மகன்கள், சகோதரர்கள், நண்பர்கள் உள்ளனர்.

    பாதுகாப்பு படை

    பாதுகாப்பு படை

    அவர்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை. இது போல் இனவாதங்களை காலங்காலமாக பார்த்து நாங்கள் சோர்ந்துவிட்டோம். இந்த தலைமுறையைச் சேர்ந்தோர் இதை சந்திக்கக் கூடாது என தெரிவித்தனர். போராட்டத்தை அடுத்து நூற்றுக்கணக்கான போலீஸாரும், தேசிய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தீ வைத்து

    தீ வைத்து

    வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு ஏராளமானோர் குவிந்ததால் அங்கு வெளிப்புற விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. 6ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் உச்சமாக வெள்ளை மாளிகைக்கு அருகில் இருந்த முக்கிய கட்டடத்தின் ஜன்னல்களுக்கு தீவைத்தனர். மேலும் அங்கிருந்த கார்களை குப்புற கவிழ்த்து தீ வைத்து கொளுத்தினர். இதனால் வெள்ளை மாளிகையை சுற்றி ஒரே தீப்பிழம்பாகவும் புகை மண்டலமாகவும் காட்சியளித்தது.

    கண்ணீர் புகை

    கண்ணீர் புகை

    போராட்டக்காரர்களை போலீஸார் கண்ணீர் புகை குண்டு, மிளகு ஸ்ப்ரே ஆகியவற்றை வீசி கலைத்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே ஒரு கட்டத்தில் அங்கிருந்த பாலத்திற்கு போராட்டக்காரர்கள் சென்றனர்.

    காயம் இல்லை

    காயம் இல்லை

    அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதுவது போல் சென்றது. இதையடுத்து அந்த லாரி டிரைவரை வெளியே இழுத்து வந்து அடித்தனர். அவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். லாரி வேகமாக போராட்டக்காரர்கள் கூட்டத்தில் புகுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    English summary
    Americans protest outside of the White House asking Justice for George Floyd's assasination by the police officer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X