வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊதா நிற ஆடையில் ஜொலித்த கமலா ஹாரிஸ்.. பின்னணியில் செம காரணம்.. வியக்கும் அமெரிக்கா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த கமலா ஹாரிஸ் அணிந்திருந்த ஊதா நிற கோட் ஆடை அமெரிக்கா முழுக்க கவனம் ஈர்த்துள்ளது.

Recommended Video

    கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா... கண்டு களித்த மன்னார்குடி மக்கள்: டிவி முன்பு அமர்ந்து ஆரவாரம்!

    ஊதா நிற ஆடையை ஒரு நோக்கத்திற்காகத்தான் அவர் அணிந்துள்ளார் என்கிறார்கள் அமெரிக்கவாசிகள்.

    அப்படி என்ன நோக்கம் என்கிறீர்களா. பெண்கள் வாக்குரிமை இயக்கம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். உலகிலேயே முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு நியூசிலாந்து என்ற பெருமை கொண்டது.

    துளசேந்திரபுரத்தில் வெடித்து சிதறிய பட்டாசு.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான 'தமிழச்சி' கமலா துளசேந்திரபுரத்தில் வெடித்து சிதறிய பட்டாசு.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான 'தமிழச்சி' கமலா

    19ம் நூற்றாண்டு போராட்டம்

    19ம் நூற்றாண்டு போராட்டம்

    ஆனால் அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு 19ம் நூற்றாண்டில் பெரும் போராட்டங்கள் நடந்தன. அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம் பல தசாப்த கால போராட்டமாகும்.

    ஊதா வண்ணம்

    ஊதா வண்ணம்

    அந்த உரிமையை வெல்ல கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் மகளிர் ஆர்வலர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள் போராடினர். அந்த போராட்டத்தின் தீம் வண்ணமாக இருந்தது ஊதா, பச்சை மற்றும் வெள்ளை. ஊதா, வெள்ளை மற்றும் கோல்டன் வண்ணங்களில் பதாகைகளை ஏந்தி போராட்டங்களில் பங்கேற்றனர் பெண்கள்.

    முதல் பெண் துணை அதிபர்

    முதல் பெண் துணை அதிபர்

    இப்போது முதல் முறையாக அமெரிக்காவின் துணை அதிபராகிறார் கமலா ஹாரிஸ். வாக்குரிமைக்கு போராடிய ஒரு இனம் இன்று துணை அதிபர் பொறுப்பில் அமர்கிறது. இதை அழகாக தனது ஆடை மூலம் பிரதிபலித்துள்ளார் கமலா ஹாரிஸ்.

    ஊதா, ஊதா, ஊதாப்பு

    ஊதா, ஊதா, ஊதாப்பு

    மேலும், ஜோ பிடன் மனைவி, ஜில் நேற்று ஊதா நிற ஆடை அணிந்திருந்தார். மிட்சேல் ஒபாமா, கிளாரி கிளிண்டனும் இன்று ஊதா நிற ஆடை அணிந்திருந்தனர். ஆக மொத்தம்.. அமெரிக்காவே, ஊதா ஊதா ஊதாப்பு.. என்று பாடி மகிழ்கிறது.

    English summary
    Kamala Harris wears purple color coat on innaguration day, with a purpose, here is the detail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X