வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எச்-1 பி விசா கெடுபிடியால் அதிக பாதிப்பு இந்தியர்களுக்குத்தான்.. இன்போசிஸ், விப்ரோ ஊழியர்கள் தவிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் நிர்வாகக் கொள்கைகளின் விளைவாக, எச் -1 பி மனுக்களுக்கான மறுப்பு விகிதம், நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 24 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் இது வெறும் 6 சதவீதமாக இருந்தது.

அமெரிக்க திங்-டேங் ஒன்றால் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அல்லது யு.எஸ்.சி.ஐ.எஸ்ஸிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவர அடிப்படையில் அமெரிக்க பாலிசிக்கான, தேசிய அறக்கட்டளையின் ஆய்வும், இதை உறுதிப்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத்தான், எச் -1 பி விசாக்களுக்கான மறுப்பு விகிதம் மிக அதிகம் என்பதை இந்த புள்ளி விவரங்கள் பிரதிபலிக்கின்றன.

மகாராஷ்டிரத்தில் அடுத்தடுத்த திருப்பம்.. சரத்பவாரை சந்தித்தார் சிவசேனா மூத்த தலைவர் ராவத்!மகாராஷ்டிரத்தில் அடுத்தடுத்த திருப்பம்.. சரத்பவாரை சந்தித்தார் சிவசேனா மூத்த தலைவர் ராவத்!

அமேசான், கூகுள்

அமேசான், கூகுள்

உதாரணமாக, 2015 ஆம் ஆண்டில் அமேசான், மைக்ரோசாப்ட், இன்டெல் மற்றும் கூகுள் நிறுவனங்களில், ஆரம்ப நிலை வேலைவாய்ப்புக்கான எச் -1 பி மனுக்களின் மறுப்பு விகிதம் 1 சதவீதம்தான். 2019 ஆம் ஆண்டில் இது முறையே 6, 8, 7 மற்றும் மூன்று சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆப்பிள் பணியாளர்களுக்கான எச்-1 பி விசா மறுப்பு விகிதம் இரண்டு சதவீதமாகவே தொடருகிறது.

டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி

டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி

அதே காலகட்டத்தில், டெக் மஹிந்திரா ஊழியர்களுக்கான, விசா மறுப்பு விகிதம், நான்கு சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகவும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸுக்கு ஆறு சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும், விப்ரோவுக்கு ஏழு சதவீதத்திலிருந்து 53 சதவீதமாகவும், இன்போசிஸுக்கு, இரண்டு சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மறுப்பு விகிதம்

மறுப்பு விகிதம்

பிற அமெரிக்க நிறுவனங்களுக்கு தொழில்முறை அல்லது தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும், அக்ஸென்ச்சர், கேப்ஜெமினி மற்றும் குறைந்தது 12 நிறுவனங்கள், 2019 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான விசா மறுப்பு விகிதங்களைக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை 2015 ஆம் ஆண்டில், இரண்டு சதவீதம் முதல் 7 சதவீத மறுப்பு விகிதங்களைத்தான் கொண்டிருந்தன.

ட்ரம்ப் திட்டம்

ட்ரம்ப் திட்டம்

உள்நாட்டு பணியாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சொல்லி ட்ரம்ப் நிர்வாகம், எச்-1 பி விசா நெறிமுறைகளில் கெடுபிடி கொண்டு வந்தது. ஆனால், அது அந்த நாட்டின் தொழில்துறைக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் உதவி பேராசிரியர் பிரிட்டா க்ளென்னன்.

அமெரிக்காவுக்கே பாதிப்பு

அமெரிக்காவுக்கே பாதிப்பு

இவர் மேற்கொண்ட ஆய்வில், "எச் -1 பி விசா கட்டுப்பாடுகளால் கனடா போன்ற நாடுகளுக்கு அதிக பணியாளர்கள் இடம் பெயருகிறார்கள். வணிகங்களும் கனடா போன்ற நாடுகளில் அதிகரிக்கிறது. உயர் திறமையான வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த முடியாமல் போவதால், அமெரிக்காவில் புதிய கண்டுபிடிப்புகள் குறைகின்றன. பிற நாடுகளில் கண்டுபிடிப்புகள் அதிகரிக்கின்றன. இவ்வாறு பிரிட்டா தெரிவிக்கிறார்.

English summary
More restrictive Trump Administration policies, denial rates for H-1B petitions have increased significantly from just six per cent in 2015 to 24 per cent in the third quarter of the current fiscal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X