• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பெருத்த நிசப்தம்.. ரஷ்யா, சீனா இன்னும் பிடனுக்கு வாழ்த்து சொல்லலையே.. ஏன்? கிளம்பியது விவாதம்

|

வாஷிங்டன்: உலக தலைவர்கள் எல்லாருமே தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடனுக்கு வாழ்த்து சொல்லி வரும் நிலையில், சீனாவும், ரஷ்யாவும் மட்டும் அமைதியாக உள்ளன.. இந்த ரெண்டு நாடுமே ஏன் வாய் திறக்கவில்லை என்பது சர்வதே அரசியலில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளன.

  Biden-க்கு வாழ்த்து சொல்லாத Russia, China | Oneindia Tamil

  நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.. இது உலக அரங்கில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

  இதையடுத்து புதிய அதிபருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமா் ஏஞ்சலா மொகல், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் போன்றோர் தங்கள் வாழ்த்துக்களை ட்விட்டரில் வெளிப்படுத்தி இருந்தனர்.

  அமெரிக்க வரலாற்றில்.. 29 வயதில் முதல் செனட் உறுப்பினர்.. 77 வயதில் முதல் அதிபர்.. இது ஜோ பிடன் கதை !

  மோடி

  மோடி

  அதேபோல, இஸ்ரேல், கனடா, எகிப்து, ஜப்பான், தென்னாப்பிரிக்கா நாட்டு தலைவர்களும் பிடனுக்கு தங்கள் மகிழ்ச்சியான வாழ்த்தை சொன்னார்கள்.. நம் பிரதமர் மோடியும் இது சம்பந்தமாக ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. பிடனுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டோவை பதிவிட்டு,"சிறப்பான வெற்றிக்கு வாழ்த்துக்கள்" என்று கூறியிருந்தார்.

   வாழ்த்து

  வாழ்த்து

  பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானும், தன்னுடைய வாழ்த்து செய்தியை வெளியிட்டிருந்தார்.. ஆப்கானிஸ்தான் அமைதி மற்றும் பிராந்திய அமைதிக்காக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம் என்றும் கூடுதலாக தெரிவித்திருந்தார்.. இதற்கு காரணம், பாகிஸ்தானை பொறுத்தவரையில், பிடனின் முந்தைய கால செயல்பாடுகள் சில விஷயங்களில் அந்நாட்டுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறது, அந்நாட்டிற்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

   விருது

  விருது

  கடந்த 2008-ல் பாகிஸ்தான் தங்கள் நாட்டின் 2-வது பெரிய விருதான ஹிலால்-ஏ-பாகிஸ்தான் விருதை பிடனுக்கு அளித்து கவுரவப்படுத்தியுமிருந்தது. ஆனால், இப்போது நிலைமையும், சூழலும் மாறிவிட்டன.. அதனால், பயங்கரவாத ஒழிப்பு, மனித உரிமை பிரச்சனைகளில் பிடன், சற்று கடுமை காட்டுபவராகவே இருப்பார் என்றுதான் தெரிகிறது.

   ரஷ்யா

  ரஷ்யா

  இப்படி, பலரும் வாழ்த்து சொல்லி வரும் நிலையில், சீனாவும், ரஷ்யாவும் மட்டும் இதுவரை பிடனுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் உள்ளன... டிரம்ப் இருந்தவரை சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.. அந்த நாட்டின் இறக்குமதி பொருள்கள் மீது வரி விதிப்புகளை மானாவாரியாக விதித்தார்.. அதுமட்டுமல்ல, உலக அளவில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க, இந்தியா உள்பட சீனாவுக்கு எதிரான எல்லா நாடுகளுக்கும் ஆதரவாகவும் டிரம்ப் செயல்பட்டார்.

  அதிபர்

  அதிபர்

  இவ்வளவு இருந்தும், டிரம்ப் அதிபர் தேர்தலில் தோற்றாலும், பிடனுக்கு சீனா இதுவரை வாழ்த்து சொல்லாமலேயே உள்ளது. ஆனால், அந்த நாட்டு மக்கள் பிடனுக்கு சோஷியல் மீடியாவில் தங்கள் வாழ்த்தை சொல்லி வருகின்றனர்.. அதேபோல, டிரம்ப் தோல்வியை சீன அரசு பத்திரிகையும் கேலி செய்துள்ளதாம்.

  தேர்தல்

  தேர்தல்

  சீனாவை போலவே ரஷியாவும் இன்னும் தனது வாழ்த்தை தெரிவிக்கவில்லை.. பிடன் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின்போது, ரஷ்யா மீது டிரம்ப் மென்மையான அணுகுமுறையை கொண்டிருந்ததாக ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருந்தார்.. மேலும் ரஷ்யாவை எதிா்ப்பு நாடாக கருதுவதாகவே வெளிப்படையாக சொன்னார்.

   விமர்சனம்

  விமர்சனம்

  அதுமட்டுமல்ல, சீனாவில் எதிர்கட்சி தலைவருக்கு சாப்பாட்டில் விஷம் வைக்கப்பட்ட விஷயத்திலும் ரஷ்ய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். விஷ தாக்குதல் விஷயத்திலும் பிடன், ரஷ்யாவை விமர்சித்திருந்தார். இதையெல்லாம் மனசில் வைத்து கொண்டு, இன்னும் பிடனுக்கு ரஷ்யா வாழ்த்து சொல்லவில்லையா என தெரியவில்லை.. ஆனால், இனிவரும் காலத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே பிடன் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  விவாதம்

  விவாதம்

  டிரம்ப் மீது ஏராளமான ஊழல்குற்றச்சாட்டை சொல்லி, பல சர்ச்சையிலும், விவகாரங்களிலும் சிக்கிய உக்ரைன் முதல்நாடாக பிடனுக்கு வாழ்த்து சொல்லி உள்ள நிலையில், சீனாவும், ரஷ்யாவும் இன்னும் வாழ்த்து சொல்லாமல் அமைதி காத்து வருவது உலக அரசியலில் பல விவாதங்களை கிளப்பி விட்டு வருகின்றன.

   
   
   
  English summary
  Russia and China silence speaks volumes as leaders congratulate US President Biden
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X