வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ரஷ்ய ஹேக்கர்கள்.. அரசு தகவல்களை திருடும் கும்பல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் முடிவையே மாற்றி அமைக்கும் திறமை படைத்த ரஷ்ய ஹேக்கர்கள் பல மாகாணங்களில் இருந்து அரசு தகவல்களையும் அமெரிக்கர்களின் தகவல்களையும் திருட தொடங்கிவிட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016-இல் நடந்த அமெரிக்க தேர்தலில் ரஷ்யர்களின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதை முல்லர் கமிஷன் ஆய்வு செய்து வருகிறது.

Russians started to hack government computers

இந்த நிலையில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்களை கணினி வழியாக ரஷ்ய ஹேக்கர்கள் திருடி ரஷ்ய அரசிடம் ஒப்படைப்பதாக தெரிகிறது. டிராகன்பிளை அல்லது எனர்ஜிட்டிக் பியர் என்ற பெயர்கொண்ட கும்பல்தான் இந்த ஹேக்கிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்த கும்பல் மின் விநியோகம், தண்ணீர் சுத்திகரிக்கும் வசதிகள், அணு மின் நிலையம் ஆகியவற்றை ஹேக் செய்துள்ளது. அது போல் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் வைபை அமைப்புகளையும் ஹேக் செய்துவிட்டது.

வெங்காயத்தின் விலை உயர்வு ஏன்?.. கட்டுக்குள் வைக்க மத்திய அரசு எடுத்த இரு அஸ்திரங்கள் என்னென்ன?வெங்காயத்தின் விலை உயர்வு ஏன்?.. கட்டுக்குள் வைக்க மத்திய அரசு எடுத்த இரு அஸ்திரங்கள் என்னென்ன?

தற்போது அரசு கணினிகளையும் ஹேக் செய்ய தொடங்கியுள்ளதால் தேர்தல் முடிவுகள் எண்ணப்படும் நேரத்தில் ஏதேனும் தில்லுமுல்லு செய்தால் வேட்பாளர்கள் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் இவர்களை யார் இயக்குகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

English summary
Russians started to hack americans state and local government computer systems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X