ஊசி போன்ற பற்கள்.. இது என்ன உயிரினம்.. மண்டையை பிய்த்து கொள்ளும் நெட்டிசன்கள்!
வாஷிங்டன்: அமெரிக்கா கடற்கரையில் அழுகிய கடல் வாழ் உயிரினத்தின் உடல் அடித்து வரப்பட்டுள்ளது. இந்த உயிரினத்தை பார்க்கும் மக்கள் இது என்னவென தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்கள்.
உலகம் முழுவதும் உள்ள ஆழ்கடல்களில் மீன்கள், நண்டுகள், சுறாக்கள், டால்பின்கள், இறால்களை தவிர்த்து விஷ பாம்புகள், ஆக்டோபஸ், உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வசிக்கின்றன.
இங்கு வசிக்கும் உயிரினங்களில் பலவற்றுக்கு பெயரும் தெரியாது, அது எந்த வகையை சேர்ந்தவை என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வசித்து வருகின்றன.

அமெரிக்கா
அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள ஓரேகானில் ப்ரூக்கிங்ஸில் மில் கடற்கரையில் ஒரு விலங்கினம் தரை ஒதுங்கியிருந்தது. இதை அவ்வழியாக சென்ற கிறிஸ்டின் டில்லட்சன் என்பவர் படம் எடுத்து இது எந்த உயிரினம் என கேள்வி எழுப்பினார். அந்த கடற்கரையின் பாறாங்கற்களில் கிடந்தது.

பற்கள் ஊசி போன்றது
அதன் பற்கள் ஊசியை போல் கூர்மையாக உள்ளது. அதன் உடல் பாகங்கள் ஆங்காங்கே பிய்ந்து போயுள்ளது. பார்ப்பதற்கு அழுகியது போல் தெரிகிறது என கிறிஸ்டின் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த உயிரினம் ஆக் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு பசிபிக் கடல்கள்
இது வடக்கு பசிபிக் கடல்களில் வசிக்கும் வுல்ஃப் ஈல் என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் வுல்ப் ஈல் என்பதற்கு படத்தில் காணும் விலங்கின் பற்கள் போதுமானதாக இல்லை. எனவே இது லிங்கோட் எனும் உயிரினம் ஆகும். இந்த உயிரினம் தினந்தோறும் தனது பற்களை மாற்றும். அந்த படத்தில் பாருங்கள் புதிய பற்களின் வரிசைகள் சுருங்கி உள்ளது என்கிறார்.

உயிரினம்
இதையடுத்து கடல் வாழ் உயிரியலாளர் ஒருவர் கூறுகையில் படத்தில் உள்ள உயிரினம் ஈல் வகையை சேர்ந்தது. இதன் பெயர் monkeyface prickle back eel ஆகும். இந்த உயிரினம் வடஅமெரிக்காவை சேர்ந்த பசிபிக் கடலோரத்தை சேர்ந்தது. இந்த வழக்கமான தோற்றத்தை கொண்டிருக்காது. உயிரோட இருக்கும் இந்த உயிரினங்களின் மூக்கு குரங்கின் மூக்கு போல் இருக்கும் என்கிறார்.