வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் நேரத்தில் அதிரடி.. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக ஏமி கோனி நியமனம்.. செனட் ஒப்புதல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்துக்கு ஏமி கோனி பாரெட் நியமிக்கப்பட்டுள்ளார். செனட்டில் நடந்த வாக்கெடுப்பில் 52-48 என்ற விகிதாச்சாரத்தில் இவருக்கு ஆதரவு கிடைத்தது.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 9 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உண்டு. அங்கு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நபா், மரணமடையும் வரை அப்பதவியில் நீடிக்கலாம்.

இந்த நிலையில்தான், உச்சநீதிமன்ற, நீதிபதியாக இருந்த ரூத் பேடா் கின்ஸ்பா்க் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 18ம் தேதி உயிரிழந்தாா்.

ட்ரம்ப் நியமனம்

ட்ரம்ப் நியமனம்

அதையடுத்து காலியான நீதிபதி பணியிடத்துக்கு முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான ஏமி கோனி பாரெட்டை அதிபா் டொனால்ட் டிரம்ப் நியமித்தாா். இருப்பினும், அதிபா் நியமிக்கும் நீதிபதிக்கு செனட் நிலைக்குழுவும், தொடா்ந்து செனட் சபையும் ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயம்.

செனட் சபை வாக்கெடுப்பு

செனட் சபை வாக்கெடுப்பு

அதிபா் டிரம்ப் நீதிபதியாக நியமித்த ஏமி பாரெட்டுக்கு செனட் நிலைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கிய நிலையில் செனட் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. டிரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சியினர்தான் செனட் சபையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். எனவே 52-48 என்ற வாக்குகள் அடிப்படையில் ஏமி கோனி நியமனத்துக்கு ஒப்புதல் கிடைத்தது.

சட்டப்படி நடப்பதாக உறுதி

சட்டப்படி நடப்பதாக உறுதி

48 வயதான பாரெட், 2017 முதல் 7 வது சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பணியாற்றியவர். ஏமி கோனி பாரெட் இதுகுறித்து கூறுகையில் அரசியலமைப்பையும் சட்டத்தையும் பின்பற்றுவதைத் தவிர வேறு எந்த அஜென்டாவும் தனக்கு இல்லை என்று உறுதியாக கூறியுள்ளார்.

அதிபர் தேர்தல் நேரம்

அதிபர் தேர்தல் நேரம்

ஆனால் தேர்தல் நேரத்தில் பாரெட் நியமனம் செய்யப்பட்டதை ஜனநாயக கட்சி எதிர்த்துள்ளது. 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம், உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதி பணியிடத்திற்கு, பராக் ஒபாமா மெரிக் கார்லண்டை வேட்பாளராக முன்மொழிந்தார். ஆனால் அந்த பணியிடத்தை நிரப்ப செனட்டில் குடியரசுக் கட்சியினர் மறுத்துவிட்டனர். தேர்தல் ஆண்டு என்பதை அப்போது காரணமாக கூறினர். இப்போது தேர்தலுக்கு ஒரு வாரம்தான் இருக்கும் நிலையில், இப்படி செய்யலாமா என்று கேள்வி எழுப்புகிறது ஜனநாயக கட்சி.

English summary
The Senate voted 52-48 Monday to confirm Amy Coney Barrett to the US Supreme Court, giving the court a 6-3 conservative majority that could determine the future of the Affordable Care Act and abortion rights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X