வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு! ட்ரம்ப்பிடம் ஓடிப்போன சீக்ரெட் சர்வீஸ்.. பிரஸ் மீட் நிறுத்தம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வெளியே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    சீனாவின் அலிபாபாவை முடக்க டிரம்ப் அதிரடி திட்டம்

    சந்தேகப்படும் குற்றவாளி மீது சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அதிபர் டொனால்டு டிரம்ப் அவ்வப்போது செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். அதன்படி அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை) அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    "இ பாஸ் கேட்பது மனித உரிமைக்கு எதிரானது.." மனித உரிமை ஆணையம் அதிரடி என்ட்ரி! தமிழக அரசுக்கு நோட்டீஸ்

    சீக்ரெட் ஏஜெண்ட்

    சீக்ரெட் ஏஜெண்ட்

    ஆனால், செய்தியாளர் சந்திப்பின் பாதியில் திடீரென அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் ஓடிச் சென்று, அவரை சுற்றி சூழ்ந்து கொண்டு, திடீரென உள்ளே அழைத்துச்சென்றனர். அங்கிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு என்ன நடக்கிறது என்பது முதலில் புரியவில்லை. ஆனால், சில நிமிடங்களுக்கு பிறகு மறுபடியும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் தோன்றினார்.

    துப்பாக்கிச் சூடு

    துப்பாக்கிச் சூடு

    அப்போது அவர், வெள்ளை மாளிகையின் வெளியே துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதாகவும், எனவேதான் பாதுகாவலர்கள் தன்னை அழைத்துச் சென்றதாகவும் விளக்கமளித்தார். இதனிடையே சீக்ரெட் சர்வீஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 17 வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவே பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், தங்கள் அதிகாரிகள் அந்த மர்ம நபரை சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    "அதிகாரிகள், சந்தேகப்படும் அந்த குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த குற்றவாளி தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்" என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ட்ரம்ப் கூறுகையில் துப்பாக்கி சூடு நடத்தியவர் யார் அவரது நோக்கம் என்ன என்பது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு கிடைத்த தகவல் படி ஆயுதங்களுடன் அந்த நபர் வந்துள்ளார். ஒருவேளை அவர் என்னை குறிவைத்து தாக்கும் நோக்கத்துடன் வந்திருக்காமல் இருக்கலாம். ஏனெனில், வெள்ளை மாளிகைக்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக நான் கருதவில்லை. இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    தெருக்கள் சீல்

    தெருக்கள் சீல்

    வெள்ளை மாளிகைக்கு வெளியே பதட்டம் இல்லை என்ற போதிலும் சில தெருக்கள் சீல் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன. இது பற்றி சம்பவ இடத்தில் அருகே இருந்த ஒரு நபர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், என்னால் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்க முடிந்தது. அதன் பிறகு ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. அது ஒரு ஆணின் குரல் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. சுமார் 8 முதல் 10 பாதுகாவலர்கள் அந்த நபரை நோக்கி ஓடியதை பார்த்தேன், என்று தெரிவித்துள்ளார்.

    ஆபத்தான பகுதி

    டொனால்ட் ட்ரம்ப் மேலும் இதுபற்றி கூறுகையில், இந்த உலகம் எப்போதுமே ஆபத்தான பகுதிதான். எனவே இது போன்ற துப்பாக்கிச்சூடு புதிது கிடையாது. நமது சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். நான் பாதுகாப்பாக உணருகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    English summary
    Secret Service guards shot a person, who was apparently armed, outside the White House on Monday, President Donald Trump said just after being briefly evacuated in the middle of a press conference.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X