வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுலயும் மோசடியா.. சீன கொரோனா தடுப்பூசி செயலாற்றல் ரொம்ப கம்மி.. அம்பலப்படுத்திய பிரேசில்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வளரும் நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் தனது மதிப்பை உயர்த்துவதற்காக சீனா எடுத்த முயற்சி பின்னடைவை சந்தித்துள்ளது. சீனா உறுதியளித்ததை போல அந்த நாட்டு கொரோனா தடுப்பூசி பெரிய பலன் கொடுக்கவில்லை.

சீனாவின் சினோவாக் பயோடெக் உருவாக்கிய ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி, பிரேசிலில், வெறும் 50.4% மட்டுமே பயனுள்ளதாக இருந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு போதுமானதாக இல்லையாம். கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட விகிதத்திற்கும் குறைவாகவே இந்த தடுப்பு விகிதம் இருக்கிறது.
சமீபத்திய முடிவுகள் பிரேசிலுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றன, ஏனெனில் சீன தடுப்பூசியை பெற, சீனாவிடம் வரிசையாக நின்ற நாட்டில் ஒன்று பிரேசில்.

சீனா, பாகிஸ்தான் ஜோடியா எதிர்த்தாலும்... அதை முறியடிக்க நமது ராணுவம் ரெடி... எம்.எம்.நாரவனே உறுதி! சீனா, பாகிஸ்தான் ஜோடியா எதிர்த்தாலும்... அதை முறியடிக்க நமது ராணுவம் ரெடி... எம்.எம்.நாரவனே உறுதி!

 சீன மருந்து ஆய்வு

சீன மருந்து ஆய்வு

கடந்த வாரம் பிரேசிலில் ஆய்வுகளை நடத்திய புட்டான்டன் இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளர்கள், "லேசான முதல் கடுமையான" கொரோனா நோயாளிகளுக்கு எதிராக தடுப்பூசி 78% செயல்திறனைக் கொண்டிருப்பதாக அறிவித்தனர்.

தடுப்பூசி செயல் திறன்

தடுப்பூசி செயல் திறன்

ஆனால், நேற்று அவர்கள் இந்த புள்ளிவிவரத்தில், மேலும் சில தரவுகளை சேர்த்துள்ளனர். எனவே, அதன் அடிப்படையில் முழு ஆய்வுப்படி பார்த்தால்,
தடுப்பூசி, செயல்திறன் விகிதம் இப்போது 50.4% ஆக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

துருக்கி, இந்தோனேஷியா

துருக்கி, இந்தோனேஷியா

சினோவாக் மருந்து சோதனைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு முடிவுகளை அளித்துள்ளன. கடந்த மாதம் துருக்கிய ஆராய்ச்சியாளர்கள் சினோவாக் தடுப்பூசி 91.25% பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தனர். புதன்கிழமை முதல் தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தோனேசியா. அங்கு சினோவாக் மருந்து, 65.3% பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இவை இரண்டுமே இடைக்கால முடிவுகள்தான்.

சீன தடுப்பூசி

சீன தடுப்பூசி

சீன தடுப்பூசி சோதனைகள் மற்றும் ஆய்வுகள், மேற்கத்திய நாடுகளின் ஆய்வுகளை போல வெளிப்படையாக இல்லை என்பது குற்றச்சாட்டாகும். இந்த நிலையில்தான் நன்கு பலன் கொடுக்கும் என்று சீனா அறிவித்த நிலையில், பிரேசிலில் அதன் செயல் திறன் வெறும் 50 சதவீதமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A coronavirus vaccine developed by China's Sinovac has been found to be 50.4% effective in Brazilian clinical trials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X