வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. என்ன இது.. கடலை மிட்டாய் மாதிரி இருக்கு.. அட நம்ம சன்னு.. நம்பவே முடியலியே!

Google Oneindia Tamil News

Recommended Video

    சூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்கும் | New solar telescope produces images of sun's surface

    வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளை, அமைப்பு, சூரியனின் மேற்பரப்பை இதுவரை யாரும் எடுக்காத வகையில் துல்லியமான புகைப்படத்தை நவீன நுண்ணோக்கி மூலம் படம்பிடித்துள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர் பிரான்ஸ் கோர்டோவா கூறுகையில், சூரியனின் இதுவரை காணப்படாத மேற்பரப்பை இந்த இன்யூய் சூரிய தொலை நோக்கி கண்டறிந்துள்ளது.

    இது சூரியனைப் பற்றிய அறிவியல் பிரிவின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த தொலைநோக்கி படம்பிடித்துள்ள சூரியனின் படம் தான் மிக மேம்படுத்தப்பட்ட படமாகும்.

    தெளிவானது

    தெளிவானது

    சமீபத்திய படங்கள் முழு சூரியனையும் உள்ளடக்கிய கொந்தளிப்பான கொதிக்கும் பிளாஸ்மாவின் வடிவத்தைக் காட்டுகின்றன. இந்த இன்யூய் சூரிய தொலைநோக்கி மூலம், சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறப்பகுதியில் உள்ள காந்தப்புலங்களை வரைபடமாக்க முடியும் என்று தெரிவித்தார்.
    இந்த தரை அடிப்படையிலான தொலைநோக்கியில் என்எஸ்எஃப் வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து, முதல் படங்களை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம் என்றும் பிரான்ஸ் கோர்டோவா கூறினார்.

    முதல் முறை

    முதல் முறை

    "இந்த படங்களையும் வீடியோக்களையும் இப்போது பகிர்ந்து கொள்கிறோம், அவை இன்றுவரை வெளியானவற்றில் சூரியனின் மிக விரிவான படங்களாகும். என்எஸ்எப்பின் இன்யூய் சூரிய தொலைநோக்கி சூரியனின் கொரோனாவிற்குள் உள்ள காந்தப்புலங்களை வரைபடமாக்க முடியும். அங்குள்ள சூரிய வெடிப்புகள் பூமியில் வாழ்க்கையை பாதிக்கக்கூடும்.

    வெப்பம் அதிகம்

    வெப்பம் அதிகம்

    இந்த தொலைநோக்கி விண்வெளி வானிலை எது என்பதைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதோடு, சூரிய புயல்களை முன்னதாக அறிந்து கொள்ள, முன்னறிவிப்பாளர்களுக்கு உதவும். சூரியக் காற்று சூரியனில் இருந்து வெளியேறி, சூரிய மண்டலத்தின் குறுக்கே ஆற்றல்மிக்க துகள்களை வீசுகிறது. சூரியனின் கொரோனா, நட்சத்திரத்தின் வெளிப்புற வளிமண்டலம் உண்மையான மேற்பரப்பை விட மிகவும் வெப்பமானது. கொரோனா ஒரு மில்லியன் டிகிரி கெல்வின். மேற்பரப்பு 6,000 கெல்வின்.

    டெக்சாஸ் அளவு

    நாங்கள் படம் பிடித்துள்ளவை செல் போன்ற கட்டமைப்புகள். அமெரிக்க மாநிலமான டெக்சாஸின் அளவு கொண்டவை. சூடான, மற்றும் கிளர்ச்சி வாயு அல்லது பிளாஸ்மாவின் நிறைகளை அவை கடத்துகின்றன. இந்த சோலார் நிறை உயரும் இடத்தில் பிரகாசமான மையங்கள் உள்ளன. சுற்றியுள்ள இருண்ட பாதைகள் பிளாஸ்மா குளிர்ந்து மூழ்கும் இடமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதை உற்று பார்த்தால், நம்மூர் கடலை மிட்டாய் மாதிரி இருக்கிறது என நெட்டிசன்கள் சொல்லி வருகிறார்கள்.

    English summary
    The NSF's Inouye Solar Telescope provides unprecedented close-ups of the sun’s surface, but ultimately it will measure the sun’s corona – no total solar eclipse required.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X