வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் 2 வீரர்களுடன் எலியும் பயணம் செய்ததா?.. இணையத்தில் வீடியோவால் அக்கப்போர்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் இரு விண்வெளி வீரர்களுடன் ஒரு எலியும் பயணம் செய்ததாக ட்விட்டரில் கிளப்பிவிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

Recommended Video

    விண்கலத்தில் 2 வீரர்களுடன் எலியும் பயணம் செய்ததா?..

    அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து கடந்த 30ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் செய்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட். இதில் நாசாவின் வீரர்களான டாக் ஹூர்லே, பாப் பெஹ்ன்கன் ஆகிய இருவர் பயணம் செய்தனர். இவர்களுடன் ஒரு டால்பின் பொம்மையும் பயணம் செய்தது.

    இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்வதற்காக கடந்த புதன்கிழமை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது வானிலை சரியில்லாத காரணத்தால் அந்த ஏற்பாடுகள் கடந்த சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    மாஸ் வெற்றி.. விண்ணுக்கு சென்ற 2 நாசா வீரர்கள்.. ஐஎஸ்எஸ்-உடன் இணைந்தது ஸ்பேஸ் எக்ஸ் மாஸ் வெற்றி.. விண்ணுக்கு சென்ற 2 நாசா வீரர்கள்.. ஐஎஸ்எஸ்-உடன் இணைந்தது ஸ்பேஸ் எக்ஸ்

    விண்ணுக்கு வீரர்கள்

    விண்ணுக்கு வீரர்கள்

    அதன்படி ஃபால்கான் 9 ராக்கெட் விண்ணிற்கு செலுத்தப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா சொந்த நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் வீரர்களை விண்ணிற்கு அனுப்பிய பெருமையையும் பெற்றது. இரு வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்ததும் இவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இன்டர்நெட்வாசிகள்

    இன்டர்நெட்வாசிகள்

    இந்த நிலையில் இரு விண்வெளி வீரர்களுடன் ஒரு எலியும் சென்றுள்ளதாக ட்விட்டரில் தகவல்கள் வைரலாகி உள்ளன. ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்ட போது எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள இன்டர்நெட்வாசிகள் எலி போன்று ஒன்று ஓடுவதை குறிப்பிட்டு இவ்வாறு பரப்பி வருகிறார்கள்.

    எலிதான்

    எலிதான்

    அதாவது ஃபால்கான் 9 ராக்கெட்டின் சூடான என்ஜின்களை சுற்றி ஒரு மர்ம பொருள் சுற்றி வருவதை வீடியோவில் சுட்டிக் காட்டியுள்ளனர். அது பார்ப்பதற்கு சாம்பல் நிறத்தில் உள்ளதால் அதை எலி என்றே முடிவு செய்துவிட்டனர். அந்த வீடியோவை வெளியிட்ட ஒருவர் நீங்கள் என்ன சொன்னாலும் சரி, அது எலிதான் என்றார்.

    விளக்கம் இல்லை

    யூடியூப்பில் வெளியான இந்த வீடியோவில் 11 வினாடிகள் எலி போன்று ஒன்று ஓடுவதாக கூறுகிறார்கள். எனினும் சிலர் அது திட ஆக்ஸிஜனின் ஒரு பகுதி என்றும் திரவ ஆக்ஸிஜனாக மாறி ஃபால்கான் 9 ராக்கெட்டிலிருந்து வெளியேறும் போது வெற்றிடம் உறைந்ததுதான் அது என்கிறார்கள். எனினும் இதுகுறித்து நாசா எந்த விளக்கத்தையும் கூறவில்லை.

    English summary
    Here is the video goes viral in internet that A mouse is also travelled in Space X with 2 astronauts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X