வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'மாபெரும் சாதனை..' 3 நாள் ஸ்பேஸ் சுற்றுலா.. பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட்டில் 3 நாட்கள் விண்வெளி சுற்றுலா சென்ற நான்கு பேர் பத்திரமாகப் பூமிக்கு திரும்பினர். இந்த விண்கலத்தில் பயணித்த 4 பேரில் யாருமே பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் இல்லை என்பது இதன் சிறப்பம்சாகும்.

Recommended Video

    Space Trip-க்கு போட்டிபோடும் Billionaires.. எவ்வளவு செலவாகும்? | Explained

    விண்வெளி தொடர்பான ஆய்வுகள் கடந்த நூற்றாண்டில் இருந்தே அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த நூற்றாண்டில் பெரும்பாலும் வல்லரசு நாடுகளே இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டன.

    முதல் பரிசு குக்கர்; 2-ம் பரிசு ஹாட் பாக்ஸ்; 3-ம் பரிசு டிபன் பாக்ஸ்; வாங்க... வந்து ஊசி போடுங்க..!முதல் பரிசு குக்கர்; 2-ம் பரிசு ஹாட் பாக்ஸ்; 3-ம் பரிசு டிபன் பாக்ஸ்; வாங்க... வந்து ஊசி போடுங்க..!

    இந்த நூற்றாண்டிலும் விண்வெளி தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்றாலும் கூட, இப்போது வல்லரசு நாடுகளைக் காட்டிலும், தனியார் நிறுவனங்களே அதிகம் ஆர்வம் காட்டுகின்றன.

    ஸ்பேஸ் சுற்றுலா

    ஸ்பேஸ் சுற்றுலா

    சர்வதேச அளவில் இப்போது பல்வேறு நிறுவனங்களும் விண்வெளி சுற்றுலாத் துறையிலேயே கவனம் செலுத்தி வருகின்றன. இதில் விர்ஜின் கேலக்டிக், ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஆர்ஜின் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த ஜூலை மாதம் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் ராக்கேட் மனிதர்களோடு வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்றுவிட்டுப் பாதுகாப்பாகத் திரும்பியது. இந்த விண்கலத்தில் விர்ஜின் நிறுவனத் தலைவர் ரீச்சர்ட் பிரான்சன் தலைமையிலான குழு இருந்தது.

    ப்ளூ ஆர்ஜின் vs விர்ஜின் கேலடிக் vs ஸ்பேஸ் எக்ஸ்

    ப்ளூ ஆர்ஜின் vs விர்ஜின் கேலடிக் vs ஸ்பேஸ் எக்ஸ்

    சில நாட்கள் இடைவெளியில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜேப் பெசோஸ் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் முதல் ஸ்பேஸ் பயணத்தை மேற்கொண்டார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து விண்ணுக்குச் செலுத்தப்பட்ட ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட், பூமியில் இருந்து 100 கிமீ உயரத்தில் மிதந்துவிட்டு பூமிக்குத் திரும்பியது. விர்ஜின் கேலடிக், ப்ளூ ஆர்ஜின் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் கடந்த சில நாட்களுக்கு முன், முதல் ராக்கெட்டை அனுப்பியது.

    பால்கன் 9 ராக்கெட்

    பால்கன் 9 ராக்கெட்

    பால்கன் 9 ராக்கெட் மூலம் மொத்தம் 4 பேர் இந்த ஸ்பேஸ் சுற்றுலாவுக்கு அனுப்பப்பட்டனர். பால்கன் 9 ராக்கெட் தானியங்கி முறையில் செயல்படும் ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட் விண்ணுக்குப் பாய்ந்த 12 நிமிடங்களில் டிராகன் விண்கலத்தைப் பூமியின் சுற்று வட்டப்பாதையில் செலுத்திவிட்டு பூமிக்குத் திரும்பியது. இந்த விண்கலத்தில் கடந்த 3 நாட்களாக நால்வரும் ஸ்பேஸ் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இந்த விண்கலத்தில் பயணித்த 4 பேரில் யாருமே பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் இல்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த டிராகன் விண்கலம் வெறும் 3 மணி நேரத்தில் 585 கி.மீ உயரத்திற்குச் சென்றது. இது சர்வதேச விண்வெளி நிலையம் அமைந்திருக்கும் உயரத்தைவிட 160 கி.மீ அதிக உயரமாகும். இந்த விண்கலம் கடந்த 3 நாட்களும் பூமியைத் தினசரி 15 முறை வரை சுற்றியது.

    தரையிறங்கியது

    தரையிறங்கியது

    3 நாட்களுக்குப் பின்னர், இன்று ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் காப்ஸ்யூல் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பியது. அந்த டிராகன் காப்ஸ்யூலில் 4 பாராசூட்டுகள் இருந்தன. அதன் உதவியுடன் புளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடல் கரையில் இரவு 7:06 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4.30) டிராகன் காப்ஸ்யூல் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பியது. கடலில் இறங்கிய அந்த காப்ஸ்யூலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுனவத்தின் ஊழியர்கள் மீட்டனர். ஸ்பேஸ் பயணம் சென்ற நால்வரும் பத்திரமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    யார் அந்த 4 பேர்

    யார் அந்த 4 பேர்

    இந்த விண்கலத்தில் பயணித்த நான்கு பேரில் யாருமே விண்வெளி வீரர்கள் இல்லை. அனைவரும் சாதாரண நபர்கள் தான். இந்த விண்கலத்திற்கான 4 டிக்கெட்களை வாங்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரெட் ஐசக்மேனா, மற்ற 3 டிக்கெட்களையும் தனக்கு முன் பின் தெரியாத மூன்று பேருக்கு அளித்துள்ளார். ஜாரெட் ஐசக்மேனா எத்தனை மில்லியன் டாலர் கொடுத்து டிக்கெட்டை வாங்கினர் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. ஜாரெட் ஐசக்மேனாவுடன் செவிலியர் ஹேலி ஆர்சீனாக்ஸ் (29), பேராசிரியர் சியான் ப்ரோக்டர் (51), ஓய்வு பெற்ற அமெரிக்க விமானப்படை வீரர் கிறிஸ் செம்ப்ரோஸ்கி (42) ஆகியோர் இந்த ஸ்பேஸ் பயணத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Four SpaceX tourists returned to Earth safely after spending three days. SpaceX first space journey latest news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X