வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பசி பட்டினி.. தாங்க முடியாமல் தன் காலையே கடித்து சாப்பிட்ட பரிதாப நாய்!

பசி காரணமாக தன் காலையே நாய் ஒன்று கடித்து சாப்பிட்டது.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: "பாக்கவே பாவமாக இருந்தது... அந்த நாயின் காலில் பாதியை காணவில்லை" என்கிறார்கள் பொதுமக்கள்!

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஜெசிக்கா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு 6 வயதாகிறது. அதன் பெயர் லியூக்.

இந்த நாய்க்கு அதன் ஓனர், பல நாட்களாக சாப்பாடு தரவில்லை. குடிக்க தண்ணியும் தரவில்லை. வேற எங்காவது போய் சாப்பிடலாம் என்றால் ஒரு கம்பத்தில் பலமாக நாயை ஓனர் கட்டி போட்டுள்ளார்.

போன் செய்தார்

போன் செய்தார்

நாய்க்கு சாப்பாடு தராததால் பசி அதிகமாகி விட்டது. பொறுத்து பொறுத்து பார்த்த நாய், திடீரென தனது காலை பிடித்து கடித்து சாப்பிட ஆரம்பித்து விட்டது. இதனை பக்கத்து வீட்டுக்கார் ஒருவர் பார்த்துவிட்டார். உடனே போலீசுக்கு போன் செய்தார்.

பாவமாக இருந்தது

பாவமாக இருந்தது

அப்போது, "எங்கள் வீட்டு பக்கம் ஒரு நாய் கட்டப்பட்ட நிலையில், தன் காலையே பசியால் கடித்து சாப்பிடுகிறது. பார்க்கவே பாவமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து வந்து நாயை மீட்டனர்.

சாப்பாடு தந்தனர்

சாப்பாடு தந்தனர்

ஆனால் அவர்கள் வருவதற்குள் நாய்க்கு பாதி காலை காணவில்லை. எலும்பும் தோலுமாக இருந்த நாயை போலீசார் மீட்டனர். முதல் வேலையாக அந்த நாய்க்கு சாப்பாடு தந்தார்கள்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

அதன்பிறகு பிறகு நோவா ஆர்க் என்ற தனியார் சேவை அமைப்பிடம் ஒப்படைத்தனர். அங்கு நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் ஓனர் ஜெசிக்கா மீது தற்போது வழக்கு பாயவுள்ளது.

English summary
A dog was forced to eat his own foot after being starved by his owners, according to the animal shelter that stepped in to save him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X