வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தை.. முதுகில் கட்டிக்கொண்டு 3 மணி நேரம் பாடம் நடத்திய பேராசிரியை

Google Oneindia Tamil News

Recommended Video

    வகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தை.. முதுகில் கட்டிக்கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை

    வாஷிங்டன்: ஒரு பேராசிரியர் மாணவர் ஒருவருக்கு உதவுவதற்காக எந்த அளவுக்கு சென்று இருக்கிறார் என்பதை பாருங்கள் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் வைரலாக ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

    அந்த புகைப்படத்தில் உள்ள பெண் பேராசிரியர் ஒருவர் அங்கு பயலும் மாணவி ஒருவரின் குழந்தையை முதுகில் வைத்துக் கட்டிக்கொண்டு தொடர்ந்து 3 மணி நேரம் பாடம் நடத்தியிருக்கிறார்.

    இந்த புகைப்படம் செப்டம்பர் 20ம்தேதி சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு 67000 லைக்குகளும், 11 ஆயிரம் ரீடுவிட்களும் கிடைத்துள்ளது. சமூக வலைதளத்தை முழுமையாக ஆக்கிரமித்த இந்த புகைப்படம் குறித்தும், அதில் வரும் பேராசிரியரின் பொறுப்பு மற்றும் அன்பு குறித்தும் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

    ஊரே ரணகளமா இருக்கு.. எங்கே போனார் ஜெயகோபால்.. ஒகேனக்கல்லில் பதுங்கலா?ஊரே ரணகளமா இருக்கு.. எங்கே போனார் ஜெயகோபால்.. ஒகேனக்கல்லில் பதுங்கலா?

    சிரமப்பட்ட மாணவி

    சிரமப்பட்ட மாணவி

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள கிக்வினட் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனது ஆண் குழந்தையை தூக்கிக்கொண்டு கல்லூரிக்கு வந்திருக்கிறார். அப்போது பேராசிரியர் ரமதா சிசாகோ சிஸ்ஸே பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் குழந்தையுடன் வந்த மாணவி ஆர்வமாக கவனிக்க விரும்பினாலும் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு பாடத்தை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு உள்ளார். ஏனெனில் குழந்தையை வைத்துக்கொள்ளும் பேபிசிட்டரை அவர் தொலைத்துவிட்டார்.

    முதுகில் குழந்தையுடன் பாடம்

    முதுகில் குழந்தையுடன் பாடம்

    இதனால் பாடத்தை கவனிக்க முடியாத நிலை என்றால், ஆசிரியர் போர்டில் எழுதிப்போடுவதையும் மாணவியால் எழுத முடியவில்லை.இதை கவனித்த பேராசிரியர் சிஸ்ஸே, குழந்தையை வாங்கி பாதுகாப்பாக ஒரு துணியால் தன் முதுகில் கட்டிக்கொண்டார். பின்னர் குழந்தையை சுமந்தபடி தொடர்ந்து 3 மணி நேரம் வகுப்பறையில் பாடம் நடத்தியிருக்கிறார் பேராசிரியர் சிஸ்ஸே.

    பாடம் நடத்திய ஆசிரியை

    பாடம் நடத்திய ஆசிரியை

    பேராசிரியர் சிஸ்ஸே நாள் முழுவதும் பாடம் நடத்தும் போது குழந்தையை வைத்திருந்த போதும், ஒரு முறை கூட குழந்தையை அவர் அழவிடல்லை. உடனக்குடன் பாட்டில் பாலை கொடுத்து அழவிடாமல் பார்த்துக்கொண்டார்.

    என் தாய் ரோல் மாடல்

    தன் குழந்தையின் மீதும் தன்னுடைய படிப்பின் மீது பேராசிரியர் காட்டிய அன்பை கண்டு வியந்து போனர் அந்த மாணவி. அத்துடன் அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பலரும் பேராசிரியரின் அன்பை கண்டு நெகிழ்ந்தனர். இந்நிலையில் குழந்தையுடன் பாடம் நடத்திய கதையை டுவிட்டரில் பேராசிரியர் ரமதா சிசாகோ சிஸ்ஸேவின் மகள் பகிர்ந்துள்ளார். என் தாய் எனக்கு ரோல் மாடல் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    57 ஆயிரம் லைக்குகள்

    57 ஆயிரம் லைக்குகள்

    இதை கேட்டும் புகைப்படத்தை பார்த்தும் வியந்து போன நெட்டிசன்கள் இப்படி பேராசிரியரா என வியந்து பாராட்டி சமூக வலைதளங்களை பேராசிரியரின் புகைப்படத்தை முழுமையாக ஆக்கிரமிக்க வைத்தனர். இதன் காரணமாக இப்படத்திற்கு 67000 லைக்குகளும், 11 ஆயிரம் ரீடுவிட்களும் கிடைத்துள்ளது. அன்பு, அக்கறைக்கு இவ்வுலகில் எங்குமே தனி மரியாதை தான்.

    English summary
    student couldn’t find a babysitter, So, professor held baby during 3-hour class on her back & fed him at. Georgia Gwinnett College
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X