வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்காவில் விறு விறுப்பாக நடைபெறும் அதிபர் தேர்தல்... 1.4 கோடி பேர் வாக்குப்பதிவு!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரைக்கும் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் வாக்குகளை செலுத்தி இருக்கின்றனர். 2016ஆம் ஆண்டில் இருந்ததை விட விறு விறுப்பாக இந்த முறை வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக முன்னதாகவே வாக்குச் சாவடிக்கு வந்திருந்து வாக்குகள் செலுத்தலாம் என்றும், தபாலில் வாக்குகள் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக ஜனநாயகக் கட்சியினர் அதிகளவில் வாக்குகளை செலுத்தி வருகின்றனர் என்று அமெரிக்க தேர்தல் திட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Study shows 10.4 million have cast their votes in U.S. presidential election

தேர்தல் துவங்குவதற்கு முன்பு தபால் வாக்குகள் குறித்து ட்ரம்ப் சந்தேகங்களை எழுப்பி இருந்தார். இந்த முறையிலான தேர்தலில் மோசடி நடக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். வரும் நவம்பர் 3ஆம் தேதிதான் அதிகாரபூர்வமாக தேர்தல் நடைபெறுகிறது.

புளோரிடா பல்கலைக் கழகத்தின் தேர்தல் தகவல் மையம் அளித்திருக்கும் புள்ளி விவரத்தில் கடந்த திங்கள் கிழமை இரவு வரை அந்த நாட்டில் 10.4 லட்சம் பேர் அதாவது ஒரு கோடியே நான்கு லட்சம் பேர் வாக்களித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

பிடன் vs டிரம்ப்.. அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஓட்டு யாருக்கு? வெளியான அசத்தல் சர்வே முடிவு பிடன் vs டிரம்ப்.. அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஓட்டு யாருக்கு? வெளியான அசத்தல் சர்வே முடிவு

இந்தப் புள்ளி விவரத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு, அக்டோபர் 16 ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், அப்போது 14 லட்சம் பேர்தான் வாக்களித்து இருந்தனர் என்று தெரிய வந்துள்ளது.

மின்னசோட்டா, தெற்கு தகோதா, வெர்மாண்ட், வெர்ஜீனியா, விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் கடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 20 சதவீதம் வாக்குகள் அதிகமாக இதுவரை பதிவாகி இருக்கிறது. தேர்தல் பிரச்சாரங்களுக்கும் இடையே விறு விறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

English summary
Study shows 10.4 million have cast their votes in U.S. presidential election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X