வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் முற்போக்குவாதிகள்.. இந்தியாவில் பழமைவாதிகள்.. இந்திய அமெரிக்கர்களின் இரட்டை நிலைப்பாடு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க குறித்த விஷயங்களில் முற்போக்குவாத கருத்துகளைக் கூறினாலும் இந்தியாவிலுள்ள விஷயத்தில் பழமைவாத நிலைப்பாட்டையே அமெரிக்க வாழ் இந்தியர்கள் எடுக்கிறார்கள் என்பது சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள புலம்பொய்ந்த மக்கள்தொகையில் சுமார் 38% கொண்ட இவர்கள், அங்குள்ள இரண்டாவது மிகப் பெரிய இனக்குழுவாகும்.

இந்நிலையில், அமெரிக்காவின் கார்னிஜி சர்வதேச அமைதி எண்டோமென்ட், ஜான் ஹாப்கின்ஸ், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஆன்லைன் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. சுமார் 1200-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்ற இந்த கருத்துக்கணிப்பில் பல முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன, அதில் அமெரிக்க குறித்த விஷயங்களில் முற்போக்குவாத கருத்துகளைக் கூறும் இவர்கள், இந்தியாவிலுள்ள விஷயத்தில் பழமைவாத நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர்.

இரட்டை நிலைப்பாடு

இரட்டை நிலைப்பாடு

அமெரிக்காவில் வெள்ளை இனவாதம் ஆபத்தானது என்று இவர்களில் 73% பேர் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்தியாவிலுள்ள இந்து பெரும்பான்மைவாதம் ஆபத்தானது என்று சுமார் 53% மக்கள் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் இந்துக்களில் சுமார் 40% பேரும், மாற்று மதத்தினரில் 67% பேரும் இந்து பெரும்பான்மைவாதம் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடிக்கு அதிகரிக்கும் ஆதரவு

பிரதமர் மோடிக்கு அதிகரிக்கும் ஆதரவு

இந்தியாவிலுள்ள அரசியல் கட்சி குறித்த கேள்விக்கு சுமார் 40% பேர் பதிலளிக்கவில்லை. பதில் அளித்தவர்களில் சுமார் 33% பேர் பாஜகவையும், 12% பேர் காங்கிரஸ் கட்சியையும் தேர்ந்தெடுத்துள்ளனர். அதேபோல குடியரசு கட்சியினர் பெரும்பாலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகவே உள்ளனர். அமெரிக்க வாழ் இந்தியர்களில் பெரும்பான்மையான இந்துக்கள்(69%) நரேந்திர மோடியை ஆதரிக்கின்றனர். அதேபோல மாற்று மதத்தினர் சுமார் 22% முதல் 33% பேர் வரை பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர்.

இந்தியா - சீனா மோதல்

இந்தியா - சீனா மோதல்

அதேபோல சீனாவுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவத்தை வலுப்படுத்த அமெரிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அங்குள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய அமெரிக்கர்களைவிட குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிக ஆதரவு அளித்துள்ளனர். பொதுவாகவே, அமெரிக்க மக்களைவிட அமெரிக்க வாழ் இந்தியர்கள் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே அதிகம் எடுத்தனர்.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் கருத்து

அமெரிக்க வாழ் இந்தியர்கள் கருத்து

அமெரிக்க வாழ் இந்தியர்களில் சுமார் 36% பேர் இந்தியா தற்போது சரியான வழியில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்தியா தற்போது சரியான பாதையில் செல்லவில்லை என சுமார் 39% பேர் தெரிவித்துள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டங்கள் ஆகியவற்றுக்கு இந்திய வாழ் அமெரிக்கர்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதேநேரம் போராட்டத்தை ஒடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தவறானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய பிரச்னை

முக்கிய பிரச்னை

அதேபோல இந்தியா தற்போது சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்னை அரசின் ஊழல்கள் என்று 18% பேர் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து பொருளாதாரம் (15%) , மத பெரும்பான்மைவாதம் (10%), சுகாதாரம் (8%), சீனா (7%), பயங்கரவாதம் (7%), சாதிப் பாகுபாடுகள் (6 %) என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியா தங்களுக்கு உதவியாக இருப்பதாக 24% பேரும் உதவியாக இல்லை என்று 12% பேரும் தெரிவித்துள்ளனர்.

English summary
While holding relatively liberal views when it comes to US politics, Indian Americans are conservative when it comes to issues back in India, latest survey has found.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X