வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செவ்வாய் கிரகத்தில் நகரம் அமைப்பேன்.. உலகின் நம்பர் 1 பணக்காரரான எலோன் மஸ்கின் காரணத்தை பாருங்க!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் நகரம் அமைப்பேன் என உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவராக உள்ளவர் எலோன் மஸ்க். இவர் தற்போது அமேசான் நிறுவனத்தின் பெசோஸை முந்திக் கொண்டு உலகின் முதல் பணக்காரராகியுள்ளார்.

டெஸ்லா எலக்ட்ரிக் கார் பங்குகளின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான உயர்வு, அமேசான் நிறுவனத்தின் லாபத்தை முந்திவிட்டது. இந்த தகவல்கள் உலகின் 500 செல்வந்தர்களின் தர வரிசை பட்டியல் வெளியிட்டுள்ள ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

49 வயது எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 186 பில்லியன் டாலர்கள் ஆகும். இதன் மூலம் பெசாலை விட 1.5 பில்லியன் டாலர்களை மஸ்க் பெற்று விட்டார். இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தையும் அவர் பிடித்துவிட்டார்.

பிரச்சினை

பிரச்சினை

இதுகுறித்து அவர் கூறுகையில் உலகின் நம்பர் 1 பணக்காரராக தான் ஆனதைப் பற்றி அவர் என்ன விசித்திரம் என ஆச்சரியமாக கூறியுள்ளார். மேலும் உலகம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு நான் தீர்ப்பு காண்பேன். செவ்வாய்க் கிரகத்தில் ஒரு நகரை உருவாக்கவும் தனக்கு பணம் தேவைப்படுகிறது.

ஊதியத்தில் பாதி

ஊதியத்தில் பாதி

செவ்வாய்க்கிரகத்தில் நகரம் அமைப்பது ஏன் என்றால் பூமி மீது விண்கல் மோதி அழிந்தால் அது மனித குலத்திற்கும் உயிரிகளுக்கும் அழிவு ஏற்படும். இதனால் செவ்வாய் கிரகத்தில் நகரம் எழுப்ப வேண்டும். அதற்கு எனது சம்பாதியத்தில் பாதியை செலவிடுவேன். எனக்கு பொழுதுபோக்க நேரமில்லை.

உல்லாச வீடு

உல்லாச வீடு

பணக்காரர்களுக்கே உரிதான உல்லாச வீடோ, படகுகளோ என்னிடம் இல்லை என்றார். 17 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்லா நிறுவனத்தை தொடங்கிய மஸ்க், தொடங்கிய இரு மாதங்களிலேயே மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை முந்தி கொண்டு உலகின் 2ஆவது பெரிய பணக்காரர் ஆனார். இதன் மூலம் டெஸ்லாவின் பங்கு விலைகள் 7 மடங்கு அதிகமாகின.

English summary
Tesla Owner Elon Musk becomes world no 1 richest man by overtaking Amazon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X