வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்தடுத்து தோல்வி... கடைசி வாய்ப்பும் போச்சு... என்ன செய்ய போகிறார் டிரம்ப்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜோ பைடன் பெற்ற வெற்றிக்கு எதிராக, டிரம்ப் தாக்கல் செய்த மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அடுத்தடுத்து நீதிமன்றம் மூலம் தோல்வியை சந்தித்து வரும் டிரம்புக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் பென்சில்வேனியா மாகாண தேர்தலை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கிலும் அவர் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு

 அமோக வெற்றி

அமோக வெற்றி

அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமோக வெற்றிபெற்றார். இவரும், துணை அதிபராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி, தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிசும் ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளனர்.

 டிரம்ப் பிடிவாதம்

டிரம்ப் பிடிவாதம்

ஆனாலும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் தோல்வியை ஏற்க மறுத்து தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார். பைடன் தேர்தல் மோசடி செய்து விட்டார், தேர்தல் முறையாக நடைபெறவிலை என அவர் பழைய பல்லவியை தொடந்து பாடி வருகிறார்.

 அடுத்தடுத்து தோல்விதான்

அடுத்தடுத்து தோல்விதான்

பிரதான மாகாணங்களில், பைடன் பெற்ற வெற்றிக்கு எதிராக டிரம்ப் பிரச்சாரக் குழு கோர்ட்டில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தது. அதில் பெரும்பாலான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. கடைசியாக பென்சில்வேனியா மாகாணத்தின் தேர்தலில், மோசடி நடந்துள்ளதாக தொடர்ந்த வழக்கு அந்த மாகாண நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 தள்ளுபடி செய்தது

தள்ளுபடி செய்தது

இந்த நிலையில் டிரம்புக்கு மேலும் ஒரு பின்னடைவாக தேர்தல் முறையாக நடக்கவில்லை என அவர் தொடர்ந்த வழக்கை கூட்டாட்சி மேல் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் சமர்பிக்கவில்லை எனக்கூறிய நீதிபதிகள் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதை ஏற்க முடியாது நியாயமற்ற குற்றசாட்டுகள் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

 ஈயத்தை தங்கமாக்க முடியாது

ஈயத்தை தங்கமாக்க முடியாது

மேலும், மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்வதில் நீதிமன்றம் பாகுபாடு காட்டுவதாக டிரம்ப் பிரசார குழுவினர் தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள் ரசவாதத்தால் ஈயத்தை தங்கமாக மாற்ற முடியாது என தெரிவித்தனர்.

 அமைதியாக வேண்டும்

அமைதியாக வேண்டும்

தேர்தல் தோல்வியை எதிர்த்து டிரம்ப் தொடரும் வழக்குகள் அவருக்கு மேலும் தொலைவியையே தருகிறது. கீழ் நீதிமன்றம், மேல் நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றமும் கைவிரித்து வருவதால் அவருக்கு மிகவும் பின்னடைவு ஏற்பட்டுளள்து. புதிய ஆட்சிக்கு வழிவிட்டு அவர் அமைதியாக செல்ல வேண்டும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
The court dismissed Trump's appeal against the victory of Joe Biden. This has been a major setback for Trump, who has subsequently been defeated by the courts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X