வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3,000 கி.மீ தொலைவிற்கு பரவும் புகை.. வெளியாகும் நச்சு கார்பன்.. உலகையே உலுக்கும் அமேசான் காட்டுத் தீ

Google Oneindia Tamil News

Recommended Video

    10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. வீடியோ

    வாஷிங்டன்: அமேசான் காட்டுத் தீ நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உலகம் முழுக்க சேதத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிட்டது.

    அமேசான் மழைக்காடுகளின் முக்கியத்துவம் குறித்து இதுவரை அறியாத மக்களுக்கும், இப்போது அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது இந்த காட்டுத் தீ.

    அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ, அதிக அளவில் புகை மற்றும் கார்பனை வெளியேற்றுகிறது. தீயில் இருந்து வரும் புகைமூட்டங்கள் அமேசான் பிராந்தியத்தில் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் பரவியுள்ளன.

    3200 கிலோ மீட்டர் தூரம்

    3200 கிலோ மீட்டர் தூரம்

    ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை ஆய்வுப்படி, அமேசான் காட்டுத் தீ, புகை அட்லாண்டிக் கடற்கரை வரை பயணிக்கிறது. 3200 கிலோ மீட்டர் தூரத்தில், உள்ள சாவோ பாலோவில் வானம் இருளாக மாறக் காரணமாக அமைந்துள்ளது என்றால் நிலைமையை பார்த்துக் கொள்ளுங்கள்.

    கார்பன் டை ஆக்ஸைடு

    கார்பன் டை ஆக்ஸைடு

    பிரேசிலின் பாரேவில் இது போன்ற சில காட்டுத்தீக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 228 மெகா டன்களுக்கு சமமான கார்பன் டை ஆக்சைடை இந்த தீ விபத்துக்கள் வெளியிட்டுள்ளன. கார்பன் மோனாக்சைடையும் தீ வெளியிடுகின்றன.

    உயிரின தொகுப்பு

    உயிரின தொகுப்பு

    அமேசான் காடு சுமார் மூன்று மில்லியன் அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகள் மற்றும் ஒரு மில்லியன் பழங்குடி மக்கள் வசிக்கும் இடம். புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் இந்த காட்டின் பங்களிப்பு முக்கியமானது. அமேசான் காடுகள் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டன் கார்பன் வெளியேற்றத்தை உறிஞ்சுகின்றன. இதனால் பூமி வெப்பமயமாவது தடுக்கப்படுகிறது.

    பிரேசில், வெனிசுலா, பொலிவியா

    பிரேசில், வெனிசுலா, பொலிவியா

    ஆனால் மரங்கள் வெட்டப்படும்போது அல்லது எரிக்கப்படும்போது, ​​அவை சேமித்து வைக்கும் கார்பன் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டு சுற்றுச்சூழல் மாசடையும். அமேசான் பிராந்தியத்தில் 9 நாடுகள் உள்ளன. அவை இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான தீ விபத்துகளை சந்தித்துள்ளன. பிரேசிலுக்கு பிறகு வெனிசுலா இரண்டாவது மிக அதிகமான எண்ணிக்கையில் தீ விபத்தை எதிர்கொண்டது. 26,000 க்கும் அதிகமான தீ விபத்துக்கள் அங்கு நடந்தன. பொலிவியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு 17,000 க்கும் அதிகமான தீ விபத்துகள் நடந்தன.

    English summary
    The fire, burning in the Amazon forest, ejects large amounts of smoke and carbon. The smoke from the fire has spread to the Amazon region and beyond.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X