வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு ''சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது''... ஜோ பைடன் அரசு கவுரவம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜுக்கு 'சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது' அறிவித்து ஜோ பைடன் நிர்வாகம் கவுரவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மக்கள் மற்றும் குழுக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் இந்த விருது எனஅஞ்சலி பரத்வாஜ் கூறியுள்ளார்.

The Joe Biden administration has honored Indian social activist Anjali Bhardwaj with the Anti-Corruption Champion Award

அமெரிக்காவில் புதிய அதிபராக பதவியேற்றது முதல் ஜோ பைடன் அங்கு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். குறிப்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் முடக்கி வைத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஜோ பைடன் அரசு ''சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது" என்ற பெயரில் புதிய விருதை அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு இந்தியாவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அஞ்சலி பரத்வாஜ் தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.டெல்லியில் சதார்க் அஞ்சலி பரத்வாஜ் சதார்க் நகரிக் சங்காதன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். மேலும் தகவல் அறியும் உரிமைக்கான தேசிய பிரச்சார குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இந்த குழு, ஊழல் தடுப்பு ஆயம் மற்றும் ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் கொண்டு வர வெற்றிகரமாக வாதிட்ட குழு ஆகும்.

இந்த விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அஞ்சலி, நாடு முழுவதும் உள்ள மக்கள் மற்றும் குழுக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் இந்த விருது என பெருமிதமாக கூறியுள்ளார். இந்த விருதை அறிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன் கூறுகையில், ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் வெற்றி பெறும் துணிச்சலான நபர்கள் மற்றும் உலக நாடுகள் உள்ளிட்ட உறுதியான கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதின் மூலம் மட்டுமே ஊழலை எதிர்ப்பதில் நாங்கள் வெற்றி பெறுவோம். இதைத்தான் ஜோ பைடன் நிர்வாகம் அங்கீகரிக்கிறது என்று கூறினார்.

English summary
The Joe Biden administration has honored Anjali Bhardwaj, an Indian social activist from the United States, with the 'International Anti-Corruption Champion Award'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X