வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகில் முதல் முறையாக புதிய உச்சம்.. கொரோனாவால் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் மரணம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100,580 ஆக உயர்ந்துள்ளது.இதன் மூலம் உலகில் முதல் முறையாக கொரோனாவால் ஒரு லட்சம் பேரை இழந்த நாடாக அமெரிக்கா மாறி உள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், வெறும் நான்கரை மாதத்தில் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 56,78,026 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 3,51,668 பேர் உயிரிழந்துள்ளனர்.

The number of U.S. coronavirus deaths touched 100,000 bench mark

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 24,26,560 பேர் குணம் அடைந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,725,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தான் உலகிலேயே இல்லாத புதிய உச்சமாக 100,580 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பிரேசிலில் 1027 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 775 பேரும், ஸ்பெயினில் 280 பேரும், மெக்ஸிகோவில் 239 பேரும், ரஷ்யாவில் 174 பேரும், இந்தியாவில் 172 பேரும், பெருவில் 159 பேரும், கனடாவில் 134 பேரும், பிரான்சில் 98 பேரும், ஸ்வீடனில் 96 பேரும உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 18929 பேரும், பிரேசிலில் 15691 பேரும் , ரஷ்யாவில் 8915 பேரும், இந்தியாவில் 5843 பேரும் பெருவில் 5772 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
The number of U.S. coronavirus deaths touched 100,000. US coronavirus death toll rises by 775 in past 24 hours
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X