வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எச்1 பி , எச் 4 விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. பின்னணி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக குடியேறியவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் திட்டத்தை முடக்கிவைத்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டினர் அமெரிக்காவில் வந்து வேலை செய்வதற்கு வழங்கப்படும் H-1B மற்றும் H-4 விசாக்கள்(H-1B மனைவிகள்) இந்த ஆண்டு இறுதி வரை வழங்க தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்

Recommended Video

    H-1B Visa Suspension : இந்த ஆண்டு இறுதி வரை ரத்து.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. பின்னணி

    அமெரிக்காவில் உள்ள அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையுடன் ஆட்சி செய்து வரும் டிரம்ப், வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலைக்கு வர வேண்டும் என்றால் மிக அதிக திறன் உடையர்களாகவும், மிக அதிக சம்பளத்தில் வேலைக்கு வரக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். மேலும் அமெரிக்க வேலைகளை இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு அவுட்சோர்ஸிங் தருவதற்கும் கடும்கட்டுப்பாடுகளை விதித்தார்.

    இந்த சூழலில் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகமாக உள்ளது. இதனால் ஹெச்1 பி விசா பற்றிய விதிமுறைகளை கடுமையாக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுளளார்.

    இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் 11 மணி நேர பேச்சுவார்த்தை! லே விரையும் ராணுவ தளபதி.. என்ன நடக்கிறது?இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் 11 மணி நேர பேச்சுவார்த்தை! லே விரையும் ராணுவ தளபதி.. என்ன நடக்கிறது?

    இந்த ஆண்டு இறுதி வரை

    இந்த ஆண்டு இறுதி வரை

    இதன்படி வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து வேலை செய்வதற்கு வழங்கப்படும் எச் 1 பி மற்றும் எச் 4 விசாவை இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    மாணவர்களை பாதிக்காது

    மாணவர்களை பாதிக்காது

    எனினும் இந்த இடைநீக்க உத்தரவு ஏற்கனவே அமெரிக்காவில் விசாக்களில் இருப்பவர்களை பாதிக்காது. பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் பட்டம் பெற்றபின்னர் தகுதிபெறும் விருப்ப நடைமுறை பயிற்சியையும் (OPT) பாதிக்காது.

    கொரோனா பணியில்

    கொரோனா பணியில்

    ஆனால் இடைநீக்கம் செய்யப்பட்ட எல் 1 விசாக்கள் (இன்ட்ராகம்பனி பரிமாற்றத்திற்கு) மற்றும் ஜே 1 விசாக்களில் (மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன), கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் பணிபுரிபவர்களுக்கு விதிவிலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானவை (டிசம்பர் 31 வரை) என்றும் அமெரிக்க தொழிலாளர்களுக்கு 525,000 வேலைகள் இதன் மூலம் கிடைக்கும் என்றும் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார்.

    அவுட்சோர்சிங் அவுட்

    அவுட்சோர்சிங் அவுட்

    புதிய விசா சீர்திருத்தபடி, ஊதிய நிலை மற்றும் திறன் நிலை இரண்டும் அதிகம் உள்ளவர்களுக்கே இனி விசா வழங்கப்படும் இது நுழைவு நிலை வேலைகளுக்கான அமெரிக்கர்களுடனான போட்டியை நீக்கும் என்று அமெரிக்க அதிகாரி கூறினார், வேலைகளை அவுட்சோர்சிங் செய்வதற்கான அனைத்து ஓட்டைகளையும் மூட வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் இந்த புதிய உத்தரவு வெளிநாட்டு வேலை கனவில் உள்ள இந்தியர்களை கடுமையாக பாதிக்கும்.

    English summary
    : The Trump administration on Monday suspended range of work visas for foreigners, including all H-1B and H-4 (for H-1B spouses) till the end of the current calendar year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X