வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் 62,500 பேருக்கு கொரோனா.. ஆட்டம் காணும் அமெரிக்கா.. நோய் பரவலை தடுத்து ஐரோப்பா அசத்தல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் ஒரே நாளில் புது உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்காவில்தான் இருப்பதிலேயே அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் 228,102 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாதம் ஐந்தாவது முறையாக உலகளாவிய தினசரி எண்ணிக்கை 200,000 ஐ தாண்டியது.

The U.S. Passes 60,000 New Daily Cases for the First Time

புளோரிடா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா போன்ற மாநிலங்களில் மோசமான பாதிப்புகள் தொடர்ந்ததால், புதிய நோய்த்தொற்றுகளின் மிகப்பெரிய இடமாக அமெரிக்கா மாறியுள்ளது. முதல் முறையாக 60,000 புதிய கேஸ்கள் ஒரே நாளில் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன.

11 நாட்களில் ஏழாவது முறையாக ஒரே நாளில் புது உச்சம் தொட்டுள்ளது அமெரிக்கா. அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை மாலை 62,500 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

பிரேசில், மெக்ஸிகோ, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை தினசரி அதிக எண்ணிக்கை கொண்ட பிற நாடுகளாகும்.

இந்தியா அனுப்பிய மாத்திரை.. சாப்பிட்டு நல்லா இருக்கேன்.. கொரோனா பாதித்த பிரேசில் அதிபர் அறிவிப்புஇந்தியா அனுப்பிய மாத்திரை.. சாப்பிட்டு நல்லா இருக்கேன்.. கொரோனா பாதித்த பிரேசில் அதிபர் அறிவிப்பு

பிற ஆரம்ப ஹாட்ஸ்பாட்கள் வைரஸ் பரவுவதைத் தடுத்தபோதும், அமெரிக்காவில் புதிய இடங்கள் ஹாட்ஸ்பாட்டுகளாக மாறி வருகின்றன.

மார்ச் 21 அன்று 6,557 உடன் புதிய கேஸ்களை பதிவு செய்தது இத்தாலி. இப்போது அது ஒரு நாளைக்கு 200 க்கும் குறைவாகவே பதிவு செய்கிறது. இது ஒரு நல்ல விஷயம். ஏப்ரல் மாதத்தில் உச்சத்தில் இருந்தபோது ஒரு நாளைக்கு சராசரியாக 8,000 புதிய கேஸ்களை பதிவு செய்த ஸ்பெயின், இப்போது சராசரியாக ஒரு நாளைக்கு 400க்கும் அதிக நோயாளிகளை பதிவு செய்கிறது.

Recommended Video

    China-வுக்கு எதிராக F-35 Stealth fighter-களை America-விடம் வாங்கும் Japan

    ஏப்ரல் நடுப்பகுதியில் ஒரு நாளைக்கு சராசரியாக 5,500 புதிய கேஸ்களுடன் இருந்த பிரிட்டன், இப்போது சராசரியாக 537 ஆக உள்ளது.

    English summary
    The number of daily global cases also broke a record, with the United States hitting more than 61,000 to be the biggest source of new infections. The U.S. death toll is also on the rise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X