வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போரை விடவும் கொரோனாவால் மோசமான பாதிப்பை சந்தித்து வரும் அமெரிக்கா, இங்கிலாந்து.. எங்கும் மரண ஓலம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 9,49,12,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,77,52,605 பேர் குணம் அடைந்துவிட்டனர். 20,29,525 பேர் மரணம் அடைந்தனர். தற்போது 25,130,691 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உலகிலேயே கொரோனா பாதிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. அங்கு தற்போது வரை 2,42,97,736 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 14341363 பேர் குணம் அடைந்தனர். 405219 அமெரிக்கர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 194581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 3,351 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு - 775 பேர் குணமடைந்தனர் தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு - 775 பேர் குணமடைந்தனர்

குறைந்தது

குறைந்தது

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த நாடான இந்தியாவில் இதுவரை 1,05,58,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 152511 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரு நாளில் 15051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 181 பேர் பலியாகி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. உயிரிழப்பு, தினசரி பாதிப்பு மிகவும் குறைந்துவிட்டது.

பலி அதிகம்

பலி அதிகம்

அதேநேரம் இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயரத்தொடங்கி உள்ளது. பிரேசலில் இதுவரை 8,456,705 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 1059 பேர் உயிரிழந்துள்ளனர். 209,350 பேர் இதுவரை கொரோனாவுக்க பலியாகி உள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் பிரேசில் 62452 பேர் புதிதாக பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறையவில்லை

குறையவில்லை

ரஷ்யாவில் இதுவரை 3,544,623 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். ஒரே நாளில் புதிதாக 24,092 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ரஷ்யாவில் குறைவாகவே உள்ளது. இதுவரை ரஷ்யாவில் கொரோனா தொற்றால் 65,085 பேர் பலியாகி உள்ளனர். ஒரே நாளில் 590 பேர் இறந்துள்ளனர்.

உருமாறிய கொரோனா

உருமாறிய கொரோனா

ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் 3,357,361 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரு நாளில் மட்டும் 1,295 பேர் பலியாகி உள்ளனர். உருமாறிய கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள இங்கிலாந்தில் நேற்று மட்டும் 41,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருவது அந்த நாட்டு மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. இங்கிலாந்து மட்டுமின்றி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, துருக்கி, கொலம்பியா, மெக்ஸிகோ போன்ற நாடுகளும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

English summary
The United States and the United Kingdom are being hit harder by the corona than by war. Only one day yesterday in the United States due to corona infection 3,351 people have been killed. United Kingdom In one day alone, 1,295 people were killed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X