வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவில் மீண்டும் பாதிப்பு கிடுகிடு.. ஷாக் தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2336 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 1582 பேரும், மெக்ஸிகோவில் 1006 பேரும் ஒரே நாளில் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 11 கோடியே 35லட்சத்து 29 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 25லட்சத்து 18 ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8 கோடியே 91லட்சத்து 19 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. உலகில் தற்போது கொரோனா பாதிப்புடன் 2 கோடியே 18 லட்சத்து 92 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

The United States, Brazil, France, Italy and India are once again covid cases increased

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 29,050,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 11,063,038 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் 10,393,886 பேரும், ரஷ்யாவில் 4,212,100 பேரும், இங்கிலாந்தில் 4,154,562 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில். அமெரிக்காவில் கொரோனாவால் அதிகபட்சமாக 75,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 67,878 பேரும், பிரான்சில் 25,403 பேரும், இத்தாலியில் 19,886 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 16,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே பள்ளியில் படிக்கும் 225 மாணவர்களுக்கு கொரோனா... அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனைஒரே பள்ளியில் படிக்கும் 225 மாணவர்களுக்கு கொரோனா... அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரததில் 2336 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். பிரேசிலில் 1582 பேரும், மெக்ஸிகோவில் 1006 பேரும், ரஷ்யாவில் 446 பேரும் ஒரே நாளில் மரணம் அடைந்தனர். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 5.20லட்சம் பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் இதுவரை 2.51லட்சம் பேரும், மெக்ஸிகோவில் 1.82லட்சம் பேரும் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 1.56 லட்சம் பேரும், இங்கிலாந்தில் 1.22 லட்சம் பேரும் மரணம் அடைந்தனர். தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில உயிரிழப்பும் பாதிப்பும் அதிகமாகவே இருப்பது உலகநாடுகளை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

English summary
The United States, Brazil, France, Italy and India are once again covid cases increased. In the United States, 2336 people were killed by corona in a single day yesterday. 1582 people were killed in Brazil and 1006 in Mexico in a single day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X