• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கோட்டை விட்ட பிடன் நிர்வாகம்.. 80 ஆயிரம் அமெரிக்க கிரீன் கார்டுகள் வீண்.. இந்தியர்களுக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வேலைவாய்ப்பு பணியாளர்களுக்கு கடந்த நிதியாண்டில் சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய 80,000 கிரீன் கார்டுகளை அமெரிக்கா வழங்கத் தவறியுள்ளது. இதை பிடன் நிர்வாகமும் ஒப்புக் கொண்டுள்ளது.

வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களைப் பெறுவதற்கு காத்திருக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலுவையில் விடப்பட்ட அந்த கிரீன் அட்டைகள் பயன்படுத்தப்படுவதை அமெரிக்க காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழ ஆரம்பித்துள்ளன.

ஒவ்வொரு வருடமும், நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்பட்டு அமெரிக்காவில் குடியேற வருவோருக்கு என்று, அதிகபட்சமாக 140,000 கிரீன் கார்டுகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. 1990 முதல் இதுதான் எண்ணிக்கை. அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை அமெரிக்க அரசுகள்.

டெல்லி விவசாய பகுதியில் கொல்லப்பட்ட இளைஞர்... யார் இந்த நிஹாங்ஸ் சீக்கியர்கள்?.. நடந்தது என்ன? டெல்லி விவசாய பகுதியில் கொல்லப்பட்ட இளைஞர்... யார் இந்த நிஹாங்ஸ் சீக்கியர்கள்?.. நடந்தது என்ன?

குடும்ப கார்டுகள்

குடும்ப கார்டுகள்

மேலும் 226,000 "குடும்ப முன்னுரிமை" கிரீன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதாவது அமெரிக்க குடிமக்கள் மற்றும் நிரந்தர குடிமக்களாக மாறியவர்கள் இருப்பார்கள் அல்லவா, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க இந்த கார்டுகள் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

குடும்ப விசாக்களுக்கான ஒதுக்கீடு முழுக்க நிரம்பாத பட்சத்தில், அங்கே எஞ்சிய கார்டுகள், வேலைவாய்ப்பு அடிப்படையில் கோரிக்கை விடுப்போருக்கு ஒதுக்கி தரப்படும். அடுத்த நிதியாண்டு இறுதிக்குள் அவை வழங்கப்படும்.

 கூடுதல் கார்டுகள் கிடைத்தன

கூடுதல் கார்டுகள் கிடைத்தன

கொரோனா காரணமாக குடிவரவு அலுவலகங்கள் மூடப்பட்டதாலும், ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளாலும், குடும்ப விருப்பத்தேர்வு கிரீன் கார்டுகள் எண்ணிக்கை 2020ல் வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக, வேலைவாய்ப்பு அடிப்படையில் கிரீன் கார்டு கேட்போருக்கு, 122,000 கிரீன் கார்டுகள் கூடுதலாக கிடைத்தன. ஆனால், இந்த கிரீன் கார்டுகள் உரியவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை.

பிடன் நிர்வாக தோல்வி

பிடன் நிர்வாக தோல்வி

பிடன் நிர்வாகம், இந்த விஷயத்தில் கடைசி நேரத்தில் அவசரப்படுத்தினாலும் கூட செப்டம்பர் 30ம் தேதி என்ற காலக்கெடுவிற்குள், கிரீன் கார்டு கொடுக்கும் இலக்கை எட்ட முடியவில்லை. இது அமைப்பு ரீதியான தோல்வியாக பார்க்கப்படுகிறது. திறமைவாய்ந்த பல ஊழியர்கள் தகுதி இருந்தாலும், இந்த கூடுதல் கிரீன் கார்டுகளை பெற முடியாமல் போய் விட்டது. கிரீன் கார்டுக்கு தகுதி இருந்தாலும், சுமார் 16 ஆண்டுகள் கூட காத்திருக்கும் நிலை உள்ள ஒரு நாட்டில் இந்த நிர்வாக குளறுபடி ஏற்றுக் கொள்ள முடியாதது.

அடுத்த வருடம் கிடைக்க ஏற்பாடு

அடுத்த வருடம் கிடைக்க ஏற்பாடு

இந்த நிலையில்தான், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த, செனட்டர் தாம் டில்லிஸ் மற்றும் பிரதிநிதி மரியன்னெட் மில்லர்-மீக்ஸ் ஆகியோர் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதில், செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு, காலாவதியான விசாக்களை "திரும்பப் பெற்று" அடுத்த ஆண்டுக்கு அவற்றை ஒதுக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 80,000 கிரீன் கார்டுகள்

80,000 கிரீன் கார்டுகள்

இந்த மசோதாவுக்கு ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு கிடைக்கவில்லை. அமெரிக்காவில் வாழும் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை வேலைவாய்ப்பு அடிப்படையிலான பசுமை அட்டைகளை வழங்குவதை எதிர்ப்பதாக ஜனநாயக கட்சி செனட்டர், ராபர்ட் மெனண்டெஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, வழங்கப்பட வேண்டிய சுமார் 80,000 கிரீன் கார்டுகள் காலாவதியாகும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க கிரீன் கார்டுக்காக இந்தியர்கள் பலரும் காத்திருக்கும் நிலையில், அமெரிக்க அரசின் இதுபோன்ற மெத்தன செயல்பாடு அவர்களுக்கு கணிசமாக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

English summary
The United States has failed to issue 80,000 green cards legally required to be issued to employers last fiscal year. The Biden management has also agreed to this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X