வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகிலேயே மிகமோசம்.. எல்லாவற்றிலும் அமெரிக்கா மீண்டும் முதலிடம்.. கடும் போட்டி தரும் இந்தியா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகிலேயே மிகமோசமான உச்சபட்ச கொரோனா பாதிப்பை அமெரிக்கா சந்தித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பிலும், ஒரு நாள் மரணத்திலும் இந்தியாவை முந்தியுள்ளது அமெரிக்கா. அதேநேரம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 74லட்சத்தை கடந்துள்ளது.

உலகில் கொரோனா தொற்றால் 3,95,65,948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 11,08,617 பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றில் இருந்து 2,96,48,639 பேர் மீண்டனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 88,08,692 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

The United States is facing the worst peak corona impact in the world

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 82,88,279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 74,30,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் வெறும் 8 லட்சம் மட்டுமே வித்தியாசம் உள்ளதால் விரைவில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் அபாயமும் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் 3 வது இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனா தொற்றால் 52,01,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் 13,69,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 71,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 65,126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 30,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் 25,086 பேருக்கும், அர்ஜெண்டினாவில் 16546 பேருக்கும் ஒரு நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 928 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரு நாளில் 886 பேரும்.'
பிரேசிலில் 716 பேரும், மெக்ஸிகோவில் 387 பேரும் ஒரு நாளில் மரணம் அடைந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 223,644 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 153,229 பேரும், இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒட்டுமொத்தமாக 113,032 பேர் மரணம் அடைந்துள்ளனர். மெக்ஸிகோவில் 85,285 பேரும், இங்கிலாந்தில் 43429 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

English summary
The United States is facing the worst peak corona impact in the world. The United States is ahead of India in one day of harm and one day of death. At the same time the corona impact in India has crossed 74 lakhs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X