வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீரில் கைதுகள், கட்டுப்பாடு இருக்கிறது.. கவனித்து கொண்டு இருக்கிறோம்.. அமெரிக்கா திடீர் கருத்து

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜம்மு-காஷ்மீரின் நிலைமையை அமெரிக்கா கவனித்து வருகிறது, மேலும் தடுப்புக்காவல்கள் மற்றும் மக்கள் மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து கவலை கொண்டுள்ளது என்று ஒரு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளுக்கான மரியாதை வழங்கப்பட வேண்டும், சட்ட நடைமுறைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளடக்கிய கருத்துக்களை நாங்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறோம்.

The US is watching the situation in Jammu and Kashmir

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுப்பதும் அவசியம்.

ஜம்மு-காஷ்மீர் விரைவில் சாதாரண நிலைக்குத் திரும்பும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். காஷ்மீர் மட்டுமல்லாது பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே அமெரிக்க நிலைப்பாடு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் இருதரப்பு பிரச்சினை என்று, ஏற்கனவே ஜி-7 உச்சி மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்திவிட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இதற்கு ஒப்புதல் தெரிவித்த நிலையில், இப்போது காஷ்மீர் விஷயத்தை கவனிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. அரபிக் கடலில் சர்சைக்குரிய சர் கிரீக் பிரதேசத்துக்கு குறி வைக்கும் பாகிஸ்தான்?காஷ்மீர் விவகாரம்.. அரபிக் கடலில் சர்சைக்குரிய சர் கிரீக் பிரதேசத்துக்கு குறி வைக்கும் பாகிஸ்தான்?

கடந்த செவ்வாய்க்கிழமை, "ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மீறப்படுகிறது" என்று குறிப்பிட்டு, ஐக்கிய நாடுகள் சபைக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

English summary
The US is watching the situation in Jammu and Kashmir and continues to be "very concerned by reports of detentions and the continued restrictions on the residents of the region", a US State Department spokesperson said today -- days after India emphasised that Jammu and Kashmir remains a bilateral issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X