வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவை அசுர புயல் தாக்கியது… 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவை அசுர வேகத்தில், புயல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்

அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்கள் புயலால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின.

The US storm hit , Dead 5 people including 3 children

மிசிசிபி மாகாணத்தில் லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான முதியவர் உயிரிழந்தார். மேலும், 3 குழந்தைகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

அலபாமா மாகாணத்தில் பெல் நகரத்தில் 42 வயதான பெண் ஒருவர் வீட்டின் மீது மரம் விழுந்து பலி ஆனார். புயல் தாக்கி இதுவரை 5 பேர் பலியாகினர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

டெக்சாஸ் மாகாணத்தில், சாலையில் மரங்கள் வேரோடு புடுங்கி கீழே விழுந்துள்ளது. மின்சாரம் இல்லாததால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. புயல் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

English summary
Deadly storm hit, Dead 5 people including 3 children : threaten 90 million lives across USA
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X