வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Leonardo-dicaprio on Chennai | சென்னை தண்ணீர் பிரச்சினை! டிகாப்ரியோ கவலை- வீடியோ

    வாஷிங்டன்: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து டைட்டானிக் திரைப்படத்தின் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ கவலை தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வந்தது. இந்த நிலையில் கோடை தொடங்குவதற்கு முன்னரே கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நீர் நிலைகளும் வறண்டுவிட்டன. இதனால் தமிழகத்தில் வறட்சி நிலவி வருகிறது.

    தண்ணீருக்காக மக்கள் இரவு பகல் பாராமல் அலைந்து வருகின்றனர். சென்னையில் உள்ள சில வற்றாத கிணறுகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்காக நீண்ட நேரம் காத்திருந்து சொற்ப அளவிலான தண்ணீரே கிடைக்கிறது என மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    ஜோலார்பேட்டை

    ஜோலார்பேட்டை

    தண்ணீர் பிரச்சினையை தீர்க்க எடப்பாடி தரப்பு ஆலோசனை கூட்டம் நடத்துவதும், எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர அரசு ரூ 65 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    எனினும் அந்த தண்ணீர் சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்குமா என தெரியவில்லை. இதுதொடர்பாக ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தமிழ் ஊடகங்கள் மட்டுமல்லாமல் ஆங்கில ஊடகங்களும் தண்ணீர் பஞ்சத்தை உலக நாடுகள் வரை கொண்டு செல்கின்றன.

    டைட்டானிக் ஹீரோ

    டைட்டானிக் ஹீரோ

    அந்த வகையில் பிபிசியில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் குறித்தும் எந்தளவுக்கு தண்ணீர் பஞ்சம் என்பதை படம் மூலம் தெரிந்து கொள்ளும் அளவிலான ஒரு புகைப்படமும் வெளியானது. இதை பார்த்த டைட்டானிக் படத்தின் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ கவலை கொண்டுள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் கவலை

    இன்ஸ்டாகிராமில் கவலை

    அவர் இன்ஸ்டாகிராமில் கூறுகையில் சென்னையில் தண்ணீர் பஞ்சத்தால் ஏற்பட்ட இந்த நிலையை மழையால் மட்டுமே காக்க முடியும். முற்றிலும் தண்ணீர் இல்லாத ஒரு நகரமாக சென்னை மாறிவிட்டது. நீர் ஆதாரமாக விளங்கிய 4 ஏரிகளும் வறண்டு விட்டதால் தென்னிந்திய நகரமான சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அரசால் ஏற்பாடு செய்யப்படும் குடிநீரை பிடிக்க மக்கள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர்.

    பிரார்த்தனை

    பிரார்த்தனை

    தண்ணீர் பஞ்சத்தால் ஹோட்டல்களும் ரெஸ்டாரென்டுகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தண்ணீர் பிரச்சினையை போக்க அரசு தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. எனினும் மழைக்காக மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Titanic Hero Leonardo dicaprio in Instagram says that "Only rain can save Chennai from this situation." A well completely empty, and a city without water. The southern Indian city of Chennai is in crisis, after the four main water reservoirs ran completely dry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X