வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறுபடியும் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தொலைப்பேசியில் சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெடிக்கும் சூழ்நிலை காணப்படும் ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் சமரசம் செய்ய தயார் என அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி இந்தியா ரத்து செய்தது. அன்று முதல் தொடர்ந்து காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அடிக்கடி அமெரிக்காவிடம் கூறி புலம்பி வருகிறது.

இம்ரான் கானுடன் டிரம்ப்

இம்ரான் கானுடன் டிரம்ப்

இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் நாட்டாமையை போல் சமரசம் பேசி அவ்வப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு போன் போட்டு பேசி வருகிறார். அப்படித்தான் நேற்று பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தொலைப்பேசியில் டிரம்ப் அரைமணி நேரம் பேசியிருக்கிறார்

சமரசம் செய்ய விருப்பம்

சமரசம் செய்ய விருப்பம்

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடியிடம் பேசிய அதிபர் டிரம்ப் இந்தியா பாகிஸ்தான் இடையே சமசரம் செய்துவைக்க கூறியிருந்தார். இந்நிலையில் எப்போதும் வேண்டுமானலும் வெடிக்கும் சூழ்நிலை காணப்படும் ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் சமரசம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

பிரான்ஸில் சந்திப்பேன்

பிரான்ஸில் சந்திப்பேன்

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், உங்களுக்கு தெரியும். பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் தான் இங்கு வந்தார். நான் வார இறுதியில் பிரதமர் மோடியை பிரான்சில் சந்தித்து பேச போகிறேன். காஷ்மீர் மிகவும் சிக்கலான இடம். அங்கு இந்துக்களும் இருக்கிறார்கள், முஸ்லீம்களும் இருக்கிறார்கள். அவர்களில் இவர்கள் இவர்கள் தான் பெரியவர்கள் என நான் சொல்ல மாட்டேன். நான் மத்தியஸ்தம் செய்ய என்னால் முடிந்ததை செய்வேன்" என்றார்.

வரலாறை விரும்புகிறார்

வரலாறை விரும்புகிறார்

விரைவில் ஜி 7 நாடுகள் பங்கேற்கும் 45வது பிரான்ஸ் உச்சி மாநாடு வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 26ம் தேதி வர நடக்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது அமெரிக்கா சார்பில் பங்கேற்க வரும் அதிபர் டிரம்ப் காஷ்மீர் குறித்து பேசுவார் என கூறப்படுகிறது. காஷ்மீர் விஷயத்தில் சமரசம் செய்து வரலாற்றில் இடம் பிடிக்க டிரம்ப் ஆசைப்படுகிறார். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பதே எதார்த்தம்.

English summary
Donald Trump Again Offers to Mediate kashmir issue, he said 'Hindus and Muslims Don't Get Along so Great'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X