வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இருவேறு பிரசார ஒளிபரப்புகளில் பங்கேற்கும் டிரம்ப்- ஜோ பிடன்.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு இரு வேறு பிரசார ஒளிபரப்புகளில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ஆம் தேதி வரவிருக்கிறது. இதில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள்.

Trump and Joe Biden held duelling separate televised townhalls

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வழக்கப்படி அதிபர் வேட்பாளர்கள் விவாதம் நடத்துவது வழக்கம். ஏற்கெனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓக்லாந்தில் ஜோபிடனும், டொனால்ட் டிரம்பும் விவாதம் நடத்தினர்.

அப்போது கொரோனா விவகாரம் தலைத்தூக்கியது. இந்த நிலையில் இரண்டாவது விவகாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் அந்த விவாதம் ரத்தானது.

இந்த நிலையில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் இருவரும் இருவேறு பிரசார ஒளிபரப்புகளில் கலந்து கொள்கிறார்கள். என்பிசி தொலைக்காட்சியில் ஒரு மணி நேரத்துக்கு டிரம்பும் ஏபிசி தொலைக்காட்சியில் ஒன்றரை மணி நேரத்துக்குத் பிடனும் பிரசாரம் செய்கிறார்கள்.

கொரோனாவை பத்தி பேசினாலே.. டிரம்ப் பீதியாகி விடுறாரே.. போட்டு தாக்கிய பிடன் கொரோனாவை பத்தி பேசினாலே.. டிரம்ப் பீதியாகி விடுறாரே.. போட்டு தாக்கிய பிடன்

அப்போது வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிப்பர். கருத்து கணிப்புகளில் பிடன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். ஆரம்பக்கட்ட வாக்களிப்பில் 14 மில்லியன் பேர் வாக்களித்துவிட்டனர்.

8 விழுக்காட்டு வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை. அத்தகையோரின் மனதில் இடம்பிடிக்க இரு வேட்பாளர்களும் கடுமையாக முயன்று வருகின்றனர்.

English summary
Trump and Joe Biden held duelling televised townhalls after their second planned debate was cancelled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X