வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் அதிபராக உதவுங்கள்.. போற போக்கில் இம்ரான் கானிடம் பிட்டை போட்ட டொனால்ட் டிரம்ப்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நான் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட இம்ரான் கான் எனக்கு உதவுவார் என டொனால்ட் டிரம்ப் கிண்டலாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், தற்போது முதல் முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். அதிபர் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று 3 நாட்கள் பயணமாக இம்ரான் கான் சென்றுள்ளார்.

இதையடுத்து வெள்ளை மாளிகைக்கு சென்ற இம்ரான் கான், டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப் கூறுகையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். அப்போது அவர் நீங்கள் மத்தியஸ்தராக இருக்க விரும்புகிறீர்களா என கேட்டார்.

மத்தியஸ்தராக

மத்தியஸ்தராக

அதற்கு நான் எங்கே என கேட்டேன். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளதால் அந்த பிரச்சினையில் மத்தியஸ்தராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்கு நான் என்னால் உதவ முடிந்தால், நான் மத்தியஸ்தராக இருப்பதை விரும்புகிறேன் என்றேன் என டிரம்ப் தெரிவித்தார்.

பிரார்த்தனைகள்

பிரார்த்தனைகள்

காஷ்மீர் விவகாரத்தில் இதுவரை மூன்றாவதாக ஒரு நாடு தலையிட்டதே இல்லை என்பதால் டிரம்பின் கருத்துகளை இம்ரான் கான் வரவேற்றார். அவர் கூறுகையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா ஒப்புக் கொண்டால் பல லட்சம் கோடி மக்களின் பிரார்த்தனைகள் உங்களுடன் (டிரம்ப்) இருக்கும் என்றார் கான்.

நிச்சயம்

நிச்சயம்

இதைத் தொடர்ந்து டிரம்ப் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தை இந்தியர்களும் நீங்களும் தீர்க்க விரும்புகிறீர்கள். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மிகவும் அழகான நாடுகள். அதன் பிரதமர்களும் புத்திசாலிகள். ஆனால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாததை என்னால் நம்பமுடியவில்லை. நான் மத்தியஸ்தராக வந்து தீர்க்க வேண்டும் என விரும்பினால் நிச்சயம் அதை செய்ய தயார்.

கிண்டல்

கிண்டல்

இந்தியாவுடன் எங்களுக்கு நல்லுறவு உள்ளது. அதே சமயம் உங்களுக்கும் இந்தியாவுக்குமான உறவில் சுமூகம் இல்லை என்பதையும் நான் அறிவேன். ஆனால் நாம் நமது உரையாடலில் இந்தியா குறித்தே பேசி வருகிறேன். எனவே எங்களால் இதில் தலையிட்டு முடிந்த உதவியை செய்வோம். விளையாட்டு வீரராக சிறந்து விளங்கிய இம்ரான் கான், பிரதமராகவும் சிறப்பாக செயல்படுகிறார் என்றார் டிரம்ப். அத்துடன் நான் மீண்டும் அமெரிக்க அதிபராக இம்ரான் எனக்கு உதவுவார் என்றும் கிண்டல் செய்தார்.

English summary
US President Donald Trump says Imran Khan as a great athlete and a very popular prime minister and also said that he would help him get re-elected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X